ஏரிஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

ஞாயிற்றுக்கிழமை, 25 ஜூன் 2017      கடலூர்
convocation

கருங்குழி ஏரிஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மூன்றாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு ஏரிஸ் அறக்கட்டளை நிறுவனர் டி. திருஞான சம்பந்தன் தலைமை தாங்கினார்.ஏரிஸ் கல்வி குழுமத்தின் தலைவர் சி.டி.அறிவழகன் முன்னிலை வகித்தார். கல்வி அறக்கட்டளை குழுவின் பொருளாளர் டாக்டர் சுரேக்காஅறிவழகன் நிறுவனத்தின் துணை தலைவர் அருணன் அறிவழகன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.இவ்விழாவில் திருவள்ளுவர் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர்  கே.முருகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பல்கலைக்கழகத்தில் இயற்பியல் துறையில் நான்காவது இடம் பிடித்த பிரீத்திரஜினாமேரிக்கு பாராட்டு சான்றுகள் மற்றும் நினைவு பரிசுகளும் வழங்கினார்.மேலும் இளங்கலை முடித்த 550- மாணவிகளுக்கு இளங்கலைப் பட்டம் வழங்கி கவுரவித்தார்.

 பலர் பங்கேற்பு

இவ்விழாவில் சேலம் தொழிலதிபர் டாக்டர் குணசேகரன், சுபாசினாகுனசேகரன்,கற்பகாம்பால்மாளவிகா,ஜவஹர் கல்லூரி வி.டி.சந்திரசேகரன்,தொழில்நுட்ப கல்லூரி ஆசிரியர் கணேசன், தமிழ் துறைத்தலைவர் சின்னப்பொண்ணு,ஆங்கில துறை த்தலைவர் வேல்முருகன், கணினி துறைத் தலைவர் செல்வி,ரேவதி,வணிகவியல் துறைத்தலைவர்  ஜானகி, கணிதவியல் துறை தலைவர் பரணிதேவி,வேதியியல் துறை தலைவர் புவனேஸ்வரி, இயற்பியல் துறைத்தலைவர் டாக்டர் இராஜேஸ்வரி, ஆகியோர் பங்கேற்றனர்.விழாவில் கலந்து கொண்ட அனைவரையும் கல்லூரி முதல்வர் டாக்டர் ச.தியாகராஜன், வரவேற்று பேசினார்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து