தோட்டகலைத்துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் கலெக்டர் வெங்கடேஷ் ஆய்வு

ஞாயிற்றுக்கிழமை, 25 ஜூன் 2017      தூத்துக்குடி
tutucorin collector

தூத்துக்குடி கலெக்டர்என்.வெங்கடேஷ், , விளாத்திக்குளம் வட்டம், எப்போதும்வென்றான், கண்ணக்கட்டை, சின்னையாபுரம், தங்கம்மாள்புரம், கமலாபுரம் ஆகிய கிராமங்களில் வேளாண்மைத்துறை, மாவட்ட நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமை மற்றும் தோட்டகலைத்துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை ஆய்வு செய்தார்கள்.

 பணிகள் குறித்த ஆய்வு

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திக்குளம் வட்டத்தில் வேளாண்மைத்துறை, மாவட்ட நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமை மற்றும் தோட்டகலைத்துறை மூலம் ரூ.21.30 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள கசிவு நீர் குட்டைகள், நீர் செறிவூட்டும் அமைப்புகள், தடுப்பணைகள், புதிய கிராம ஊரணிகள், பண்ணைக்குட்டைகள் ஆகிய பணிகளை ஆய்வு செய்து, மழைக்காலங்களில் பெய்யும் மழை நீரை வீணடிக்காமல் இது போன்ற இயற்கை வளம் மேம்பாட்டு பணிகளை துரிதமாக செய்து, இன்னும் அதிக அளவில் உரிய இடங்களை தேர்வு செய்து நிலத்தடி நீர்மட்டத்தை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ள துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும், தோட்டக்கால் நிலங்களில் நீர்தேவை குறைவான பயிறுவகைகள், சிறுதானிய பயிர்களை பயிரிட விவசாயிகளுக்கு அறிவுரை வழங்கினார். அதனை தொடர்ந்து அயன்பொம்மையாபுரம் கிராமத்தில் தோட்டக்கலைத்துறை மூலம் வித்தியாசேகரபாண்டியன் தோட்டத்தில் ரூ.7.37 லட்சம் மானியத்தில் பசுமைக்குடில் அமைத்து வெள்ளரி சாகுபடி செய்யப்பட்டுள்ளதை பார்வையிட்டார்.

விவசாய உபகரணங்கள்

மேலும், விளாத்திக்குளம் வட்டாரத்தில் ஆற்றங்கரை சொக்கலிங்கபுரத்தில் வேளாண்மைத்துறை மூலம் எம்.காசி என்பவர் நிலத்தில் 3 ஏக்கர் பரப்பில் அமைக்கப்பட்ட கோ7 பாசி பயிறு விதைப்பண்ணையினை பார்வையிட்டு, எப்போதும்வென்றான் மற்றும் கமலாபுரம் கிராமங்களில் பண்ணை வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 4 விசைத்தெளிப்பான்கள், 6 கைத்தெளிப்பான்கள் மற்றும் 4 தார்பாய்கள் என மொத்தம்  ரூ.81,000- மதிப்பிலான விவசாய கருவிகளை 14 விவசாயிகளுக்கும், மேலும், விவசாயிகள் விதைப்பண்ணை அமைப்பதை ஊக்கப்படுத்தும் பொருட்டு வம்பன் 5 உளுந்து கருவிதைகளை 3 பயனாளிகளுக்கு கலெக்டர்என்.வெங்கடேஷ்,  வழங்கினார்கள்.

பலர் பங்கேற்பு

ஆய்வின் போது வேளாண்மை இணை இயக்குநர் செல்வராஜ், மாவட்ட ஆட்சித்தலைவரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) முத்து எழில், மாவட்ட நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமை துணை இயக்குநர் மனோகரன், வேளாண் உதவி இயக்குநர்கள் செல்வின் இன்பராஜ், பாலசிங் மற்றும் மாவட்ட வேளாண்துறை களப்பணியாளர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து