முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எச் 1 பி விசா குறித்து அதிபர் டிரம்ப்பிடம் பிரதமர் மோடி பேச வேண்டும் - அமெரிக்க வாழ் இந்தியர்கள் கோரிக்கை

ஞாயிற்றுக்கிழமை, 25 ஜூன் 2017      உலகம்
Image Unavailable

நியூயார்க் : அரசுமுறைச் சுற்றுப்பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி, இந்திய பொறியாளர்களை வெகுவாக பாதித்துள்ள எச் 1 பி விசா குறித்து அதிபர் டிரம்ப்பிடம் பேச வேண்டும் என அமெரிக்க வாழ் இந்தியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஐ.டி. துறைகளுக்கு நெருக்கடி

அமெரிக்க அதிபராக கடந்த ஜனவரி மாதம் பதவியேற்ற டொனால்ட் டிரம்ப், அங்குள்ள மென்பொருள் நிறுவனங்கள் உள்ளிட்ட முன்னணி தொழிற்சாலைகளில் இருக்கும் வேலை வாய்ப்பு வெளிநாட்டவருக்கே செல்வதாகவும், அது கட்டுப்படுத்தப்படும் என அறிவித்தார்.
அமெரிக்காவின் ஐ.டி. துறையில் 85 சதவீதத்துக்கும் அதிகமாக இந்தியர்களே பணிபுரிந்து வரும் நிலையில், அவர்களால் அமெரிக்கர்களுக்கு வேலை வாய்ப்பு பறிபோகிறதே என்ற எண்ணத்தில் ஐ.டி. துறைகளுக்கு நெருக்கடி கொடுத்தார்.

‘எச்.1பி’ விசா வழங்கும் நடைமுறைகளில் மாற்றம்

ஐ.டி. நிறுவனங்கள் நஷ்டப்படும் அளவுக்கு கடுமையான முறையில் இரு மடங்கு சம்பள உயர்வு அறிவித்தார்.  அடுத்த கட்டமாக வெளிநாட்டவர்கள் அமெரிக்காவில் பணிபுரிய செல்வதற்கான ‘எச்.1பி’ விசா வழங்கும் நடைமுறைகளில் மாற்றம் செய்தார். பல்வேறு கெடுபிடிகளையும் நிபந்தனைகளையும் விதித்தார். இதனால், இந்தியாவில் உள்ள பொறியாளர்கள் வெகுவாக பாதித்துள்ளனர்.

கோரிக்கை

இந்நிலையில், அரசுமுறைப்பயணமாக அமெரிக்காவுக்கு சென்றுள்ள பிரதமர் மோடி முதன் முறையாக வெள்ளை மாளிகையில் டொனால்ட் டிரம்பை சந்தித்து பேச உள்ளார். மோடியின் அமெரிக்க வருகையால் மகிழ்ச்சியடைந்துள்ள அமெரிக்க வாழ் இந்தியர்கள் எச் 1 பி விசா பிரச்சனையை பிரதமர் மோடி,  அதிபர் டிரம்ப்பிடம் எடுத்துரைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

அமெரிக்க ஐ.டி. துறையானது இந்திய பணியாளர்கள் இல்லாமல் முழுமையும், வளர்ச்சியும் அடையாது இதனால், இந்த பிரச்சனையை முக்கியமாக மோடி எழுப்ப வேண்டும் என அமெரிக்க வாழ் இந்தியர்கள் கூறினர்.

மேலும், அமெரிக்காவில் இந்தியர்கள் இனரீதியிலான தாக்குதலுக்கு உள்ளாவது குறித்தும் மோடி தனது கவலையை டிரம்பிடம் பதிவு செய்ய வேண்டும் என அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து