முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தானும், ஆப்கானிஸ்தானும் ஒருங்கிணைந்து அரசியல் பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும் - சீன வெளியுறவுத் துறை மந்திரி வலியுறுத்தல்

ஞாயிற்றுக்கிழமை, 25 ஜூன் 2017      உலகம்
Image Unavailable

இஸ்லாமாபாத் : பாகிஸ்தானும், ஆப்கானிஸ்தானும் ஒருங்கிணைந்து ஒத்துழைப்புடன் செயல்பட்டு பிரச்சனைகளுக்கு அரசியல் தீர்வு காண வேண்டும் என்று சீனா வலியுறுத்தியுள்ளது.

தீவிரவாத தாக்குதலுக்கு ஆளாகும் நாடுகளில் ஆப்கானிஸ்தானும் ஒன்று. தலிபான் தீவிரவாதிகள் ஆப்கானிஸ்தானில் தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தி வருகின்றனர்.  இதனிடையே தீவிரவாதிகளின் புகழிடமாக பாகிஸ்தான் திகழ்ந்து வருவதாக ஆப்கானிஸ்தான் தொடர்ச்சியாக குற்றம்சாட்டி வருகிறது. இதனால் பாகிஸ்தான், ஆப்கான் இடையே கருத்து மோதல் நிலவி வருகிறது.

இந்நிலையில், பாகிஸ்தானும், ஆப்கானிஸ்தானும் ஒருங்கிணைந்து ஒத்துழைப்புடன் செயல்பட்டு பிரச்சனைகளுக்கு அரசியல் தீர்வு காண  வேண்டும் என்று சீனா வலியுறுத்தியுள்ளது.

சீன மந்திரியுடன் அஜிஸ் சந்திப்பு

பாகிஸ்தான் சென்றுள்ள சீன வெளியுறவுத் துறை மந்திரி வாங் யி, அந்நாட்டு பிரதமர் ஆலோசகர் சர்தஜ் அஜிஸை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பின் போது ஆப்கானிஸ்தானில் நிலவி வரும் அரசியல் சூழல் குறித்தும், ஆப்கான், பாகிஸ்தான் உறவு குறித்தும் விவாதிக்கப்பட்டது.

முன்னதாக நேற்று காபூல் நகர் சென்ற  வாங், ஆப்கான் வெளியுறவுத் துறை மந்திரி சலகுட் தின் ரப்பானி மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஹனீப் அத்மர் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து