முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மகிழ்ச்சி பெருகட்டும்-சகோதரத்துவம் ஓங்கட்டும்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி ரம்ஜான் வாழ்த்து

ஞாயிற்றுக்கிழமை, 25 ஜூன் 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை : மகிழ்ச்சி பெருகட்டும் -சகோதரத்துவம் ஓங்கட்டும் என்று ரம்ஜான் பெருநாளை கொண்டாடும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள ‘ரம்ஜான்’ திருநாள் வாழ்த்து செய்தியில் கூறி இருப்பதாவது:-

ஈகைத் திருநாளாம் ரம்ஜான் பெருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது இனிய ரம்ஜான் திருநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இறைவனின் அருளை பெறுவதற்காக இந்த புனித ரமலான் மாதத்தில் இஸ்லாமியப் பெருமக்கள் நோன் பிருந்து, நல்லொழுக்கம், நற்பண்பு, ஈகை குணங்களை வளர்த்து, இறை சிந்தனையை மனதில் நிறுத்தி, ஏழைகளுக்கு உணவு அளித்து, திருக்குரான் ஓதி, பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகையில் பங்கேற்று, எல்லோரும் எல்லாமும் பெற்று வளமுடன் வாழ்ந்திட இறைவனை தொழுது, ரம்ஜான் பண்டிகையை குடும்பத்தினருடன் உற்சாகமாக கொண்டாடி மகிழ்வார்கள்.

4900 மெட்ரிக் டன் அரிசி

புரட்சித் தலைவி அம்மாவின் வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு, புனித ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க தமிழகம் முழுவதும் உள்ள 3000-க்கும் மேற்பட்ட பள்ளிவாசல்களுக்கு 4900 மெட்ரிக் டன் அரிசி வழங்கியது, உலமாக்களின் மாதாந்திர ஓய்வூதியத்தினை 1000 ரூபாயிலிருந்து 1500 ரூபாயாக உயர்த்தி வழங்கியது, மாவட்ட முஸ்லிம் மகளிர் உதவும் சங்கங்களுக்கு அரசால் வழங்கப்படும் இணை மானியத் தொகையை 1:1 என்பதிலிருந்து 1:2 என்ற விகிதாச்சாரத்தில் உயர்த்தி வழங்கியது,

நலத்திட்டங்கள்

தமிழ்நாடு வக்ப் வாரியத்திற்கு 1 கோடி ரூபாய் நிருவாக மானியம் ஒதுக்கீடு செய்தது, பள்ளிவாசல்கள், தர்காக்கள் போன்ற வக்ப் நிறுவனங்களில் பழுது பார்ப்பு மற்றும் புனரமைப்பு பணிகளை மேற்கொள்ள 3 கோடி ரூபாய் தொகுப்பு நிதி உருவாக்கியது, நாகூர் தர்கா சந்தனக்கூடு திருவிழாவிற்கு தேவைப்படும் சந்தனக் கட்டைகளை ஆண்டுதோறும் வழங்குவது போன்ற பல்வேறு நலத்திட்டங்களை இஸ்லாமியப் பெருமக்களின் நல்வாழ்விற்காக சீரிய முறையில் செயல்படுத்தி வருகிறது.

இந்த பெருநாளில், உலகில் அமைதி நிலவட்டும், அன்பு தழைக்கட்டும், மகிழ்ச்சி பெருகட்டும், சகோதரத்துவம் ஓங்கட்டும் என்று வாழ்த்தி, என் அன்புக்குரிய இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை எனது உளமார்ந்த ரம்ஜான் திருநாள் நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து