மாவட்ட இளைஞர் நீதிக்குழு கலந்துரையாடல் கூட்டம்: நீதிபதி டி.இளங்கோவன் தலைமையில் நடந்தது

ஞாயிற்றுக்கிழமை, 25 ஜூன் 2017      திருவள்ளூர்
District Youth Justice Committee Discussion Meeting

சென்னை, உயர்நீதிமன்ற இளைஞர் நீதிக்குழும அறிவுறுத்தலின்படி திருவள்ளுர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் சார்பாக மாவட்ட அளவில், 2015 ஆம் ஆண்டு இளைஞர் நீதிச் (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டம் மற்றும் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகள் பாதுகாக்கும் சட்டம் 2012 ஆகியவற்றை சிறப்பாக நடைமுறை படுத்துதல் குறித்த கலந்தாய்வு கூட்டம் முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி டி.இளங்கோவன்  தலைமையில் நடைபெற்றது.

 பலர் பங்கேற்பு

இக்கூட்டத்தில் மகளிர் நீதிமன்ற நீதிபதி  எஸ்.சுபத்திராதேவி, மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு செயலர் சார்பு நீதிபதி ஜி.சரஸ்வதி, தலைமை குற்றவியல் நீதிபதி (பொ)ஜி.சாந்தி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ப.செந்தில், இளைஞர் நீதிக்குழும உறுப்பினர்கள் எம்.கனகராஜ் மற்றும் எஸ்.கோமளா, குழந்தைகள் நலக்குழு தலைவர் எஸ்.எல்லீஸ்பானு மற்றும் உறுப்பினர்கள் எம்.தசரதன்,எ.அருண் அமல், நன்னடத்தை அலுவலர் ப.ஏகாம்பரம், சிறப்பு சிறார் காவல் அலகின் சார்பில் மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர், குழந்தைகள் இல்ல நிர்வாகிகள் மற்றும் சைல்டுலைன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ஆகியோர் இக்கூட்டத்தில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து