நித்யானந்தா ஆசிரம சன்னியாசிகளை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

ஞாயிற்றுக்கிழமை, 25 ஜூன் 2017      திருவள்ளூர்
Nithyananda requested to take action against the assassins of the Ashram

பொன்னேரியில் நித்யானந்தா சீடர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி சன்னியாசிகள் சார்பில் கோரிக்கைவிடப்படது.

 கோரிக்கை

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் சென்னை திருசூலம் மற்றும் திருவண்ணாமலையில் அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிக்க முயன்றதாக கூறி நித்யானந்த சாமியாரின் சீடர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்தும்,தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுருத்தியும் பெண் சன்னியாசிகள் உள்ளிட்ட நூற்றூக்கும் மேற்பட்டோர் ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.அப்பொழுது தமிழக அரசு தங்களூக்கு பாதுகாப்பு வழங்கவேண்டும் எனவும் வலியுருத்தி கோரிக்கை விடுத்தனர்.

பலர் பங்கேற்பு

பொன்னேரி தொகுதி அமைப்பாளர் சந்திரசேகர் தலைமையில்,இரா.சம்பத்,வெற்றிநிதி,ஹேமந்த்குமார்,வில்வபதி ஆகியோர் முன்னிலையில் நடைப்பெற்ற இந்த நிகழ்ச்சியில் மனித்யசுப்ரியானந்தா,மனித்ய ஆத்மபிரியானந்தா,மனித்ய நிர்பயானந்தா,மனித்ய யோகாஸ்வாலுபந்தா மஹாராஜ்,மனித்ய யோகா மாயானந்தா மஹராஜ் ஆகியோர் இதில் கலந்துக்கொண்டனர்.காஞ்சிவாயல் கண்ணன் நன்றி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து