முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கை கடற்படையினரால் ராமேசுவரம் மீனவர்கள் 11 பேர் கைது

ஞாயிற்றுக்கிழமை, 25 ஜூன் 2017      தமிழகம்
Image Unavailable

ராமேசுவரம் : இலங்கை கடற்படையினரால் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேசுவரம் மீனவர்கள் 11 பேர் கைது செய்யப்பட்டனர்.

600-க்கும் மேற்பட்ட ...

ராமேசுவரம் பகுதியி்லிருந்து சனிக்கிழமை காலையில் 600-க்கும் மேற்பட்ட படகுகளில் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். கச்சத்தீவு, தலைமன்னார் கடல் பகுதியில் இவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் 100க்கும் மேற்பட்ட படகுகளை சுற்றி வளைத்தனர். பின்னர் மீனவர்கள் கற்களால் வீசி தாக்கி மீன்பிடிக்க விரித்திருந்த மீன்பிடி வலைகளை வெட்டி கடலில் எரிந்தனர். இதையறிந்த மீனவர்கள் அங்கிருந்து படகுகளை வேறுபாதையில் செலுத்தி தப்ப முயன்றனர். ஆனால், ராமேசுவரத்தை சேர்ந்த சக்திவேல், தங்கச்சிமடம் பகுதியை சேர்ந்த ஆரோக்கியதாஸ் என்பவர்களுக்குக்கு சொந்தமான விசைப்படகுகளை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர். பின்னர் படகிலிருந்து இருந்த  பால்ராஜ், நாகநாதன், ராஜூ, முருகன், மற்றொரு முருகன், உக்கரம், சைமன், வழிவிட்டான், முத்துபாண்டி, ரஞ்சன், படகு உரிமையாளர் ஆரோக்கியதாஸ், ஆகிய 11 மீனவர்களையும் கைது செய்துனர்.

விசாரணை

பின்னர் சக்திவேல் படகில் பிடித்த மீனவர்கள் 6 பேரையும் தலைமன்னார் கடற்படை முகாமுக்கும், ஆரோக்கியதாஸ் படகில் கைதுசெய்யப்பட்ட 5 மீனவர்களையும் காங்கேசன் துறைமுகப்பகுதிக்கும் அழைத்து சென்றனர்.அங்கு கடற்படை முகாமில் வைத்து மீனவர்களை இலங்கை கடற்படையினர் விசாரணை செய்து 6 மீனவர்களை மன்னார் போலீஸாரிடமும், 5 மீனவர்களை காங்கேசன்துறை போலீஸாரிடமும் ஒப்படைத்தனர்.

நீதிமன்றக்காவல்

அங்கு போலீஸார்கள் மீனவர்களிடம் விசாரணை நடத்தி எல்லை தாண்டி மீன்பிடிக்க வந்ததாக வழக்கு பதிந்து 6 மீனவர்களை மன்னார் நீதிமன்றத்திலும், 5 மீனவர்களை காங்கேசன்துறை நீதிமன்றத்திலும் ஆஜர் படுத்தினர். அங்கு மீனவர்களை விசாரணை செய்த அந்தந்த  நீதிபதிகள் மீனவர்கள் 11 பேருக்கும் ஜூலை மாதம் 11-ம் தேதி வரை நீதிமன்றக்காவலில் வைக்க உத்தரவிட்டார். அதன் பேரில்  மீனவர்கள் 6 பேரை யாழ்பாணம் சிறையிலும்,5 மீனவர்களை வவுனியா சிறையிலும் போலீஸார் அடைத்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து