பொன்னேரியில் சிறிய திருக்கோயில்களுக்கு பூஜை உபகரணங்கள்:அமைச்சர் பா.பெஞ்சமின் வழங்கினார்

ஞாயிற்றுக்கிழமை, 25 ஜூன் 2017      திருவள்ளூர்
Pooja equipment for small shrines in Ponneri Minister P  Benjamin presented

பொன்னேரியில் அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயிலில் இந்துசமய அறநிலையத்துறை சார்பில் சிறிய திருக்கோயில்களுக்கு பூஜை உபகரணங்கள் வழங்கும் விழா நடைப்பெற்றது.  ஊரக தொழில்துறை அமைச்சர் பா.பெஞ்சமின் அவர்கள் கலந்துக்கொண்டு பொன்னேரி வட்டத்திற்குட்பட்ட இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களின் நிர்வாகிகள்,அர்சகர்களிடம் பூஜை பொருட்களை வழங்கினார்.

 பலர் பங்கேற்பு

இந்த நிகழ்ச்சியில் திருவள்ளூர் கலெக்டர் சுந்தரவல்லி,பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் சிறுணியம் பலராமன்,இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அசோக்குமார்,இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜான்சிராணி,கோட்டாட்சியர் [பொருப்பு]அரவிந்தன்,வட்டாட்சியர் சுமதி,தனி சிறப்பு வட்டாட்சியர் தமிழ்செல்வன்,ஆலய செயல் அலுவலர் கிருஷ்ணமூர்த்தி,பொன்னுதுரை,உபயதுல்லா,பானுபிரசாத்,வெற்றிவேல் ராமலிங்கம்,ஆறுமுகம்,கோளூர் கோதண்டன்,நாகராஜ்,சலீம்,ரஞ்சன்,சவுகத் அலி,மெரட்டூர் திருமுருகன்,கடப்பாக்கம் ராஜா,பிள்ளையார் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து