முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜி.எஸ்.டி வரிக்கு ஆதரவாக சட்டமன்றத்தில் சட்டம் நிறைவேற்றிய தமிழக அரசுக்கு நன்றி - மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டி

ஞாயிற்றுக்கிழமை, 25 ஜூன் 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை : ஜி.எஸ்.டி வரியை நிறைவேற்ற தமிழக சட்டமன்றத்தில் மசோதா கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டதற்காக தமிழக அரசுக்கு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் நன்றி தெரிவித்தார்.
நாங்கள் வரியை திணிக்கவில்லை

மத்திய அரசு கொண்டுவந்துள்ள சரக்கு மற்றும் சேவை வரி இந்தியா முழுவதும் வரும் ஜூலை 1 ம் தேதி முதல் அமல்படுத்தப்பட உள்ளது. இந்த வரி விதிப்பு முறை குறித்து சென்னை கலைவாணர் அரங்கத்தில் பல்வேறு துறையினரிடம் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கலந்தாய்வு கூட்டத்தை மத்திய இணையமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

ஜி.எஸ்.டி வரி என்பது நாங்கள்போடுவதில்லை. பிரதமர் மோடி எந்த தரப்பினரிடமும் வரியை திணிக்கவில்லை, ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள அமைச்சர்கள் கொண்ட ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில், அந்தந்த மாநில அமைச்சர்கள் ஒப்புதலுடன் தான் வரிகள் போடப்பட்டுள்ளன. அந்த கவுன்சிலுக்கு மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி தலைவர் என்றாலும் மாநிலங்களின் ஒப்புதலோடு தான் வரிகள் நிர்ணயிக்கப்படும், அந்தந்த மாநிலங்களை சார்ந்த அமைச்சர்கள் இடம் பெற்ற கவுன்சில் கூட்டத்தில் ஒருத்தர் கூட எதிர்ப்பு தெரிவிக்காத நிலையில் இந்த ஜி.எஸ்.டி. விரி விதிப்பு ஒருங்கிணைந்து எடுக்கப்பட்ட முடிவின் படி ஜி.எஸ்.டி வரி அமுல்படுத்தப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவையில் ஜி.எஸ்.டி. வரி விதிப்புக்கு,ஆதரவாகதீர்மானம்நிறைவேற்றப்பட்டுள்ளது. அதற்காக நான் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த கருத்தரங்கை அனைத்து மாவட்டங்களில் நடத்த வேண்டும் என்பதே அரசின் விருப்பம். அனைத்து கேள்விகளுக்கும் பதில் சொல்ல தயாராக இருக்கிறோம். சிறு வியாபாரிகளுக்கு நஷ்டம் ஏற்படக்கூடாது என்ற எண்ணத்தின் அடிப்படையில் தான் ஜி.எஸ்.டி. இருக்கிறது.

முறைகேடுகளுக்கு இடமில்லாத வரி

இப்போது இருக்கும் நிலையில் இருந்து அதிக வரி போடாமல், குறைந்தாலும் பரவாயில்லை என்ற தத்துவத்தின் அடிப்படையில் தான் ஜி.எஸ்.டி. வரி போடப்படுகிறது. எங்கேயும் இப்போது இல்லாத வரியை கொண்டுவரவில்லை. இருக்கிற வரியை ஜி.எஸ்.டி.யின் உள்ளே எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. ஒருவேளை குறைந்திருக்கலாமே தவிர, கூடுதலாக வரி விதிக்கப்படவில்லை. வணிகர்கள் பதிவு செய்தால் வரி செலுத்துங்கள். ஆனால் பதிவு செய்வதற்கு கட்டாயம் இல்லை. அதிகாரிகள் வந்து விசாரித்த நிலை மாறி, கம்ப்யூட்டர் மூலமாக வியாபார கணக்குகளை வியாபாரிகளே மேற்கொள்ளலாம். வெளிப்படையான வரி விதிப்பு என்பதால், அதிகாரிகள் லஞ்சம் பெறமுடியாது. லஞ்சம் மற்றும் ஊழலை ஒழிப்பதற்காக தான் இந்த நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்த வரிவிதிப்பு முறையால் மத்திய அரசிற்கு வருமானம் கூடும் என கூறுகிறார்கள்.

மருத்துவம்- பள்ளிகளுக்கு வரி இல்லை

மத்திய அரசிற்கு வருமானம் வந்தால் வியாபாரிகள் கோரியது போல், ஒய்வூதியம்,வீடு போன்றவற்றை அளிக்க வேண்டும் என்கின்றனர். ஆனால் இந்தியாவில் பள்ளிகள், மருத்துவமனைகளுக்கு வரி விதிப்பது இல்லை. இந்தியாவில் உள்ள குழந்தைகளுக்கு தரமான கல்வி, தரமான சாலை வசதிகள் போன்றவற்றை அமைத்து தர முடியும் என்று தெரிவித்தார், இதைத்தொடர்ந்து நிருபர்களுக்கு பேட்டியளித்த .அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறும்போது, தமிழகம் முழுவதும் ஜி.எஸ்.டி. தொடர்பாக கருத்தரங்கம் நடைபெற்று வருகிறது. இதில் வியாபாரிகளுக்கு ஏற்படும் சந்தேகங்கள் தீர்த்து வைக்கப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக தான் தற்போது இந்த கருத்தரங்கம் நடைபெற்றது. ஜி.எஸ்.டி. தொடர்பாக அடிக்கடி தோன்றும் கேள்விகளுக்கு வலைதளங்களில் பதில்கள் இருக்கின்றன.வியாபாரிகள் வலைதளத்துக்கு சென்றும் தங்களது சந்தேகங்களை தீர்த்துக்கொள்ளலாம். ஜிஎஸ்டி கவுன்சில் மூலம் நிவர்த்தி செய்யப்படும். சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் இ&மெயில் முகவரியும் வழங்குகிறோம். அதில் கேள்வி கேட்பவர்களுக்கும் பதில் தெரிவிக்கப்படும்.

வரியால் விலைகள் உயராது

பிராண்ட் பெயர் இல்லாமல், டிரேடு மார்க் இல்லாமல் இருக்கக்கூடியவர்களுக்கு வரி இல்லை. அதேபோல் ரூ.20 லட்சத்துக்கும் குறைவாக விற்பனை செய்பவர்களுக்கும் வரி இல்லை. பொதுமக்களுக்கு ஒரு விளக்கம், வியாபாரிகளுக்கு ஒரு விளக்கம் என்று இல்லை. எல்லோருக்கும் ஒரே விளக்கம் தான். இந்த சரக்கு சேவை வரியால் விலைவாசி உயராது என்றார். இந்த கலந்தாய்வு கூட்டத்திற்கு பாஜ மாநிலத்துணைத்தலைவர் அரசகுமார் தலைமை தாங்கினார், வணிகர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் கருத்துக்களை கேட்டு அவர்களின் மனுக்களை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பெற்றுக்கொண்டார், . இந்த கலந்தாய்வு கூட்டத்திற்கு பாஜ மாநிலத்துணைத்தலைவர் அரசகுமார் தலைமை தாங்கினார், முன்னதாக கலந்தாய்வு கூட்டத்திற்கு பாஜ மாநிலத்துணைத்தலைவர் அரசகுமார் தலைமை தாங்கினார் பாஜ மாநிலத்தலைவர் தமிழிசை செளந்தர்ராஜன், துணைத்தலைவர் கரு.நாகராஜன், செம்மலர் சேகர் உள்ளிட்ட பலர் கூட்டத்தில் பங்கேற்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து