முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன்: இந்தியாவின் ஸ்ரீகாந்த் பட்டம் வென்றார்

ஞாயிற்றுக்கிழமை, 25 ஜூன் 2017      விளையாட்டு
Image Unavailable

சிட்னி : ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டனில் சீன வீரரை வீழ்த்தி இந்தியாவின் ஸ்ரீகாந்த் பட்டம் வென்றார்.

சிட்னியில் நடந்த ஆஸ்திரேலிய ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் ஆண்கள் ஒற்றையர் இறுதியில் உலக தரவரிசையில் 11–வது இடம் வகிக்கும் இந்திய நட்சத்திர வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த், ஒலிம்பிக் சாம்பியனும், 2 முறை உலக சாம்பியனுமான சீனாவின் சென் லாங்குடன் மல்லுகட்டினார். தரவரிசையில் 6–வது இடத்தில் உள்ள சென் லாங்கிற்கு எதிராக இதுவரை ஆடிய 5 ஆட்டங்களிலும் ஸ்ரீகாந்த் தோல்வியையே தழுவியிருந்தார். நேற்று அதற்கு பதிலடி கொடுத்து பட்டத்தை வென்றார்.

போட்டியில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஸ்ரீகாந்த் 22-20, 21-16 என்ற கணக்கில் சென் லாங்கை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றார்.

இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் அரை இறுதியில் ஸ்ரீகாந்த், 4–ம் நிலை வீரரான சீனாவின் ஷி யுகியை 21–10, 21–14 என்ற நேர் செட்டில் 37 நிமிடங்களில் துவம்சம் செய்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்ரீகாந்த் வென்று இருக்கும் இரண்டாவது சர்வதேச பட்டம் இதுவாகும். முன்னதாக இந்தோனேஷியன் ஓபன் சூப்பர் சீரிஸ் பட்டத்தை வென்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சென் லாங், ஷி யுகியை வீழ்த்த சிறப்பான ஆட்டத்தை ஸ்ரீகாந்த் வெளிப்படுத்தினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து