முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நல்ல கதைகள் தான் முக்கியம் நடிகை சாய் தன்ஷிகா

ஞாயிற்றுக்கிழமை, 25 ஜூன் 2017      சினிமா
Image Unavailable

Source: provided

தமிழ் சினிமா கொண்டாடும் வீரமங்கை. தான் ஏற்கும் கேரக்டரில் துணிச்சல் காட்டும் நடிகை சாய் தன்ஷிகா. ‘கபாலி’ புகழ் நடிகை என்று சொன்னாலும், அதன் மூலம் கிடைத்த நற்பெயரை தன்னுடைய கடுமையான உழைப்பால் தக்க வைத்துக் கொண்டிருப்பவர். தொடர்ந்து வித்தியாசமான கதைகளை தேடி நடிப்பதில் ஆர்வம் காட்டும் அவரை அண்மையில் சந்தித்து உரையாடினோம்.

‘உரு’ பட அனுபவம் குறித்து..?

உண்மையில் அப்படத்தின் கதையை கேட்டவுடன் நடிக்க ஒப்புக்கொண்டேன். ஆனால் படபிடிப்பு நடந்த இடமோ கொடைக்கானலில் இருக்கும் தற்கொலை முனை அருகேயிருக்கும் ஓரிடம். நடந்த மாதமோ டிசம்பர். அதனால் அங்கு குளிர் எங்களை பாடாய் படுத்தியது. மைனஸ் மூன்று டிகிரி. நான்கு டிகிரி இருக்கும். அந்த குளிரிலும் நடிக்கவேண்டும் என்றால் கடின உழைப்பைக் கடந்து. ஒரு மன உறுதி வேண்டும்.அதிருந்தால் மட்டுமே அந்த சூழலில் நடிக்கமுடியும். இதனை என்னுடன் பணியாற்றிய ஒட்டுமொத்த குழுவினரும் உணர்ந்திருந்தனர். அதனால் குழுவாக பணியாற்றினோம்.அதிலும் சண்டைக்காட்சிகளின் போது இயக்குநர் நீங்களே நடித்தால் நன்றாக இருக்கும் என விருப்பப்பட நானே நடித்தேன்.அத்துடன் படத்தின் இரண்டாம் பாகத்தில் கதையில் வரும் சம்பவங்களுக்கு நம்பகத்தன்மை வேண்டும் என்பதற்காக முழுமையாக உழைத்தோம்.படத்தின் இரண்டாம் பாகத்தில் ஒரிடத்தில் ‘அவனிடமிருந்து நான் தப்பிக்க முடியாது. ஆனால் அவனை என்னால் ஜெயிக்க முடியும்’ என்று வசனம் பேசுவேன்.

இந்த வசனத்தை அனைவரும் குறிப்பிட்டு பாராட்டியது எனக்கு மகிழ்ச்சியைத் தந்தது. இதில் பெண்களின் முன்னேற்றம் அவர்களிடமுள்ள திறமைகளை அவர்களே உணரும் வகையில் அமைக்கப்பட்டதால் இதற்கு பெரிய வரவேற்பு கிடைத்திருக்கிறது என்று நம்புகிறேன். ‘படத்தின் இரண்டாம் பாகத்தில் வரும் சஸ்பென்சும், அது உடையும் விதமும் எதிர்பாராத விதமாகஇருந்தது’ என்றும், ‘அந்த வில்லன் கேரக்டருக்கு ஒரு பெண் மீது தான் வெறி. அதனால் தான் அவன் ஒரு பெண் முயலைக் கொன்றான் ’ என்றும், ரசிகர்கள் நுட்பமாக பார்த்து பாராட்டும் போது, உண்மையிலேயே என்னுடைய மனதில் மகிழ்ச்சி ஏற்பட்டது. அப்போது இந்த படத்திற்காக பட்ட கஷ்டங்கள் அனைத்தும் மறந்து போனது.

அடுத்து..?

‘காலக்கூத்து’ என்ற படத்தில் மதுரை பெண்ணாக நடிக்கிறேன். கல்லூரிக்கு செல்லும் பெண்ணாக நடித்திருக்கிறேன். இதிலும் எனக்கு கலையரசன் தான் ஜோடியாக நடிக்கிறார். பல ஆண்டுகளாக மதுரையில் ஒரு பெண் காதலில் விழுந்துவிட்டால்..அந்த பெண்ணை அவரது குடும்பத்தினர் எப்படி அணுகுகிறார்கள்? என்ற எண்ணவோட்டத்தை அசலாக மண் மணம் மாறாமல் பிரதிபலிப்பது போலிருக்கும் கதையிது. இதனை நாகராஜ் என்ற புதுமுக இயக்குநர் இயக்கியிருக்கிறார். இவரும் இந்த மண்ணைச் சேர்ந்தவர் தான். யாரிடமும் உதவியாளராக பணியாற்றாமல் இயக்கும் படமிது.
இயக்குநர் மீரா கதிரவனின் இயக்கத்தில் ‘விழித்திரு’.வட சென்னை குடிசைப்பகுதியில் வாழும் பெண்ணாக நடித்திருக்கிறேன். முதன்முதலில் இந்த படத்தில் காமெடி கலந்து நடித்திருக்கிறேன்.

ஆக்ஷன் ஹீரோயினாக த்தான் தொடரவிருக்கிறீர்களா?

அப்படியெல்லாம் திட்டமிட்டு நடிக்கவில்லை. நான் தேர்ந்தெடுத்து நடிக்கும் படங்களில் அப்படி அமைந்துவிடுகிறது. ஒவ்வொரு படத்திற்கும் வித்தியாசமான கேரக்டரைத்தான் தேர்ந்தெடுக்கிறேன். ‘டேவிட்’ என்ற படத்தை இயக்கிய பிஜோய் நம்பியார் இயக்கும் ‘சோலோ’ என்ற படத்தில் ஒரு அற்புதமான கேரக்டரில் நடித்திருக்கிறேன். அதில் கண் பார்வையற்ற பெண்ணாகவும், கன்டெம்பரரி நடனக் கலைஞராகவும் சவாலான கேரக்டரில் நடித்திருக்கிறேன். எனக்கு ஜோடியாக துல்கர் சல்மான் நடித்திருக்கிறார். இரவில் நடனபயிற்சி காலையில் சூட்டிங் என ஒய்வில்லாமல் நடித்தேன். அதே சமயத்தில் முழுமையாக ஆக்ஷன் ஸ்கிரிப்ட் வந்தால் அதிலும் நடிக்க தயாராகவேயிருக்கிறேன்.

கமர்சியல் ஹீரோயினாக நடிக்காமல் கனமாக கேரக்டரில் நடித்து வருகிறீர்களே ?

பாலா, ஜனநாதன், வசந்தபாலன் ஆகிய படைப்பாளிகள் எனக்காக போட்டு தந்த பாதையில் நான் தொடர்ந்து பயணிப்பதால் இந்த நிலை உருவாகியிருக்கிறது என்று எண்ணுகிறேன். அதே சமயத்தில் துல்கர் சல்மானுடன் இணைந்து நடித்திருக்கும் ‘சோலோ ’என்ற படம் என்னை கமர்சியல் நடிகையாகவும் வெளிப்படுத்தும்.

காதலில்..?

இல்லை சார். சினிமாவிலும் இல்லை. வெளியிலும் இல்லை. உண்மையைச் சொல்லப்போனால் அதற்கெல்லாம் நேரமில்லை.

அழகின் ரகசியம்..?

இது ஆறாண்டு காலமாக பின்பற்றி வரும் கம்பைண்ட் டயட். அனைத்து வகையான உணவையும் சாப்பிடுவேன். ஆனால் அளவோடு சாப்பிடுவேன்.மனதை ரிலாக்ஸாக வைத்திருப்பதில் தீவிர கவனம் செலுத்துவேன்.

தமிழைத் தவிர..?

தெலுங்கில் ‘வாலுஜடா..’ என்ற படத்திலும், கன்னடத்தில் சுனில் குமார் தேசாய் என்பவரின் இயக்கத்தில் உருவாகும் ‘உத்கர்ஷா’ என்ற படத்திலும் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறேன். எந்த மொழியில் நடித்தாலும் கதை தான் முக்கியம். கதை நன்றாக இருந்தால் மொழி கடந்தும் நடிப்பேன்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து