முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வேலூர் மாவட்டத்தில் கடந்த 6 ஆண்டுகளில் 54,503 படித்த மற்றும் பட்டயம் பெற்ற பெண்களுக்கு 171.40 கோடி திருமண நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது: கலெக்டர் சி.அ.ராமன்., தகவல்

திங்கட்கிழமை, 26 ஜூன் 2017      வேலூர்

மறைந்த தமிழக முதலமைச்சர் அம்மா அவர்கள் ஆட்சிப் பொறுப்பு வகிக்கும் போதெல்லாம் பெண்களுக்கான புதுமையான பல திட்டங்களை அறிமுகப்படுத்தி அகில இந்திய அளவிலும் உலகிலுள்ள அறிஞர் பெருமக்களிடையேயும் பெருமதிப்பையும் பாராட்டுதலையும் பெற்று தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார்கள். தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் வாழும் மக்களின் வாழ்க்கை முறைக்கு ஏற்றார் போல சமூக சீர்திருத்த திட்டங்களை மறைந்த முதல்வர் அவர்கள் அறிமுகப்படுத்தி பல சமூக தீமைகளை களைந்து சமூகத்தின் நலிந்த பிரிவினரின் நலனை பாதுகாத்து வந்துள்ளார். மறைந்த முதல்வர் அவர்கள் அறிவித்து செயல்படுத்திய அனைத்து சிறப்பு திட்டங்களும் பெண்களுக்கு அதிகாரம் அளித்து சமூகத்தில் மதிப்பு மிக்க நிலைக்கு அவர்களை உயர்த்துவதையே தலையாய குறிக்கோளாக கொண்டவை.

திருமண நிதியுதவி

 

குடும்ப செலவை சரிக்கட்ட ஆணும் பெண்ணும் சம்பாதிக்க வேண்டியுள்ள இந்த காலகட்டத்தில் பெண்கள் தங்கள் கல்வி அறிவை வளர்த்து உயர்கல்வி பெற்று நல்ல வேலைவாய்ப்பை தேடி கொள்ளும் வகையில் அரசு எண்ணில்லா வாய்ப்புகளை ஏற்படுத்தியும் நிதியுதவி திட்டங்களை வழங்கியும் வருகிறது. அதனடிப்படையில் மறைந்த தமிழக முதல்வர் அம்மா அவர்கள் பெண்கள் உயர்கல்வி பயில பெற்றோரை ஊக்குவிக்கம் வகையில் உயர்த்தப்பட்ட திருமண உதவி தொகையுடன் திருமாங்கல்யத்திற்கு 4 கிராம் தங்கம் வழங்கும் திட்டத்தை செயல்படுத்தினார்கள். இத்திட்டம் 17.05.2011 அன்று மறைந்த தமிழக முதலமைச்சர் அம்மா அவர்களால் துவக்கிவைக்கப்பட்டது. இத்திட்டம் 55 சதவிகிதப் பெண்களை உயர்கல்வி கற்க ஊக்குவித்துள்ளது.

இத்திட்டத்தின் முலம் அனைத்து வகையான திருமண நிதியுதவி திட்டங்களின ;கீழ் பெண்களுக்கு வழங்கப்பட்டு வந்த 25 ஆயிரம் நிதியுதவிடன் திருமாங்கல்யம் செய்வதற்கான 4 கிராம் தங்க நாணயமும் சேர்த்து வழங்கப்படுகிறது. மேலும் பட்டயப்படிப்பு முடித்த பெண்களுக்கு வழங்கப்படும் நிதி ரூ25 ஆயிரத்திலிருந்து ரூ50 ஆயிரம் ஆக உயர்த்தப்பட்டு திருமாங்கல்யம் செய்ய 4 கிராம் தங்க நாணயம் வழங்கப்படுகிறது. மேலும் இந்த திருமாங்கல்யத்திற்கு 4 கிராம் தங்க நாணயம் வழங்கப்படுவதை 8 கிராமாக உயர்த்தப்படும் என்று மறைந்த தமிழக முதல்வர் அம்மா அவர்கள் தேர்தல் அளித்த வாக்குறுயினை உடனடியாக நிறைவேற்றிடும் வகையில் 23.05.2016 முதல் இத்திட்டத்தை செயல்படுத்த ஆணையிட்டார்கள். அதனடிப்படையில் தற்போதைய தமிழக முதலமைச்சர் எடப்பாடி.கே.பழனிச்சாமி அவர்களின் தலைமையிலான அரசு ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு 8கி தங்க நாணயம் வழங்கி வருகிறது.

வேலூர் மாவட்டத்தில் திருமண நிதியுதவியுடன் 4 கிராம் தங்கம் வழங்கும் திட்டத்தில் பத்து மற்றும் பனிரெண்டாம் வகுப்பு படித்த 40,148 ஏழைப் பெண்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் விதம் ரூ.100.37- கோடி திருமண நிதியுதவியும், ரூ.42,89,41,232- கோடி மதிப்பீல் தலா 4 கிராம் விதம் திருமண திருமாங்கல்யத்திற்கு 160.6 கி.கிராம் தங்க நாணமும் வழங்கப்பட்டுள்ளது. மேலும் திருமண நிதியுதவியுடன் 4 கிராம் தங்கம் வழங்கும் திட்டத்தில் பட்டம், பட்டயம் முடித்த 13,755 ஏழைப் பெண்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் விதம் ரூ.68.78-கோடி திருமண நிதியுதவியும், ரூ14,73,31,408- கோடி மதிப்பீல் தலா 4 கிராம் விதம் திருமண திருமாங்கல்யத்திற்கு 55.02 கி.கிராம் தங்க நாணமும் வழங்கப்பட்டுள்ளது ஆகமொத்தம் 4 கிராம் தங்கம் வழங்கும் திட்டத்தில் ரூ.226.77 கோடி மதிப்பீல் திருமண உதவித்தொகையும் தங்க நாணயமும் வழங்கப்பட்டுள்ளது.

தாலிக்கு தங்கம்

அம்மா அவர்களால் 2016 தேர்தலில் அளித்த வாக்குறுதியின் படி ஏழை பெண்களின் திருமணத்திற்கு வழங்கப்பட்டு வந்த 4 கிராம் தங்கம் 8 கிராம் தங்கமும் குடும்ப வருமான உச்ச வரம்ப ரு.24000 இருந்து ரு.72000 ஆகவும் உயர்த்தி வழங்கிட ஆணைபிறப்பிக்கப்பட்டது. திருமண நிதியுதவியுடன் 8 கிராம் தங்கம் வழங்கும் திட்டத்தில் பத்து மற்றும் பனிரெண்டாம் வகுப்பு படித்த 300 ஏழைப் பெண்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் விதம் ரூ.75 இலட்சம் திருமண நிதியுதவியும், ரூ 69 இலட்சத்து 60 ஆயிரம் மதிப்பீல் தலா 8 கிராம் விதம் திருமண திருமாங்கல்யத்திற்கு 2.400 கி.கிராம் தங்க நாணயமும் வழங்கப்பட்டுள்ளது. மேலும் பட்டம் மற்றும் பட்டயம் முடித்த 300 ஏழைப் பெண்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் விதம் ரூ.1.5-கோடி திருமண நிதியுதவியும், ரூ 69 இலட்சத்து 60 ஆயிரம் மதிப்பீல் தலா 8 கிராம் விதம் திருமண திருமாங்கல்யத்திற்கு 2.400 கி.கிராம் தங்க நாணயமும் வழங்கப்பட்டுள்ளது. ஆகமொத்தம் 8 கிராம் தங்கம் வழங்கும் திட்டத்தில் ரூ.3.64 கோடி மதிப்பீல் திருமண உதவித்தொகையும் தங்க நாணயமும் வழங்கப்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் கடந்த 6 வருடங்களில் தமிழக அரசின் சிறப்பு திட்டமான இத்திட்டத்தில் ஏழை எளிய தாய்மார்களின் 54,503 பெண் பிள்ளைகளுக்கு 230.41கோடி மதிப்பில் திருமண உதவித்தொகையும் திருமண திருமாங்கல்யத்திற்கு தங்க நாணயமும் வழங்கப்பட்டு பயனாளிகள் பயனடைந்துள்ளனர். என்று கலெக்டர் சி.அ.ராமன். தெரிவித்துள்ளார்கள்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து