சூடாபுரம் பகுதியில் ரூ. 16 -லட்சம் மதிப்பில் இரண்டு குடிநீர் சுத்திகரிக்கப்பட்ட மையங்கள்: அமைச்சர் பா.பாலகிருஷ்ணா ரெட்டி திறந்து வைத்தார்

திங்கட்கிழமை, 26 ஜூன் 2017      கிருஷ்ணகிரி
1

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ஒன்றியத்திற்குட்பட்ட பாகலூர் மற்றும் பெலத்தூர் ஊராட்சி சூடாபுரம், ஆகிய பகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து தலா ரூ 8 - லட்சம் மதிப்பில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள இரண்டு குடிநீர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் ( ஆர்.ஓ) மையங்களை கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் பா.பாலகிருஷ்ணா ரெட்டி அவர்கள் நேற்று (25.06.2017) திறந்து வைத்தார்.

குடிநீர் வழங்கும் நிலையம்

 

பின்பு அமைச்சர் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவிக்கும் போது:

அம்மா அவர்களின் அரசு பொதுமக்களுக்கு நல்ல குடிநீர் வழங்க வேண்டும் என்பதற்காக சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. அதன் படி பாகலுர் மற்றும் சூடாபுரம் ஆகிய இரண்டு இடங்களில் தலா ரூ. 8 லட்சம் மதிப்பில் இரண்டு சுத்தகரிக்;கப்பட்ட குடிநீர் வழங்கும் மையம் இன்று பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டுள்ளது. இத் திட்டத்தின் கீழ் ஓசூர் நகராட்சியில்; மேலும் 10 - இடங்களில் இது போன்ற குடிநீர் சுத்திகரிப்பு மையம் அமைக்கப்படவுள்ளது. இதே போல மாவட்டம் முழுவதும் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி, அல்லது ஒன்றிய பொதுநிதியிலிருந்து சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையம் அமைக்கப்படவுள்ளது.

இந்த மையத்திலிருந்து 1 மணி நேரத்திற்;கு 1000 லிட்டர் குடிநீர் சுத்திகரிக்கப்பட்டு ஒரு நாளைக்கு சராசரியாக 5 ஆயிரம் லிட்டர் சேமிக்கப்படும். ஒரு நபருக்கு ரூ.2 -க்கு 20 லிட்டர் குடிநீர் வழங்கப்படும். இந்த குடிநீரை பொதுமக்கள் குடிநீர்;காக மட்டுமே பயன்படுத்தி கொள்ள வேண்டும். குடிநீர் வினியோகம் காலை நேரத்தில் 6.30 முதல் - 9.30 வரையும், மாலை நேரத்தில் 4.30 முதல் 7.30 வரை இந்த மையங்களில் குடிநீர் வினியோகிக்கப்படும். பொதுமக்கள் அதிகமாக வசிக்கும் பகுதிகளை தேர்வு செய்து அவர்களுக்கு தராமான சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என செய்தியாளர்களிடம் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் பா.பாலகிருஷ்ணா ரெட்டி தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியின் போது உதவி செயற்பொறியாளர் மாது, வட்டார வளர்ச்சி அலுவலர்; சி.சாந்தி, உதவி பொறியாளர் அ.தமிழ், வட்டாட்சியர் பூசன்குமார், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் லட்சுமி, கூட்டுறவு சங்க தலைவர் வி.டி.ஜெயராமன், ஜெயபிரகாஷ், மாதேவா, பி.முனிராஜ், ரவிகுமார், ஆர். ஷியாமளராஜ் மற்றும் பலர் கலந்துக்கொண்டனர்.

 

2019 தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள்

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து