திறந்தவெளி மலம் கழித்தலை இல்லாத மாவட்டமாக சேலம் மாவட்டத்தை மாற்றிட நடவடிக்கை: கூட்டத்தில் கலெக்டர் வா.சம்பத், தகவல்

திங்கட்கிழமை, 26 ஜூன் 2017      சேலம்
2

சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தூய்மை பாரத இயக்கம் (கிராமின்) திட்டத்தின் கீழ் மாவட்ட அளவிலான துறை தலைவர்களுக்கான ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் கலெக்டர் வா.சம்பத், தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலெக்டர் தெரிவித்ததாவது.்

அறிவுரைகள்

 

மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் மூலம் தூய்மை பாரத இயக்கம் (கிராமின்) திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. திறந்த வெளியில் மலம் கழிப்பதை முற்றிலுமாக ஒழிப்பதே இதன் முக்கிய நோக்கமாகும். இத்திட்டத்தின் மூலம் மாவட்ட அளவில் அனைத்து பள்ளிகளிலும் தினந்தோறும் இறைவணக்கத்தின் போது சுகாதார உறுதிமொழியினை மாணவர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்வது எனவும், திறந்தவெளியில் மலம் கழிப்பதை தடுத்து நிறுத்துவதற்கு அனைத்து துறைச்சார்ந்த அரசு அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், 31.07.2017க்குள் மாவட்டம் முழுவதும் திறந்தவெளி மலம் கழித்தலை முற்றிலும் நிறுத்தி சேலம் மாவட்டத்தை தூய்மையான மாவட்டமாக பிரகடனப்படுத்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. மகளிர் திட்டம் மற்றும் புதுவாழ்வு திட்டத்தின் கீழ் அனைத்து மகளிர் சுய உதவிக்குழுவினர் மற்றும் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் கிராம வறுமை ஒழிப்புச்சங்க உறுப்பினர்கள் அனைவரும் முதற்கட்டமாக கழிவறை கட்டுவது எனவும் திறந்தவெளி மலம் கழித்தலை உடனே தடுத்து நிறுத்துவது நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இத்தகைய ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தை மாதம் ஒருமுறை நடத்திடவும், பணி முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்ய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு கலெக்டர் வா.சம்பத், தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, க.கவிதா, மகளிர் திட்ட இயக்குநர் எஸ்.ஈஸ்வரன், இணை இயக்குநர் (சுகாதார பணிகள்) டாக்டர்.வளர்மதி, உதவி திட்ட அலுவலர்கள் வெ.கண்ணன், செல்வன், உமாராணி மற்றும் மாவட்ட அளவிலான அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

2019 தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள்

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து