முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோடியக்கரை பறவைகள் சரணாலயத்தில் கோடை மழையில்லாததால் வெளிநாட்டுப் பறவைகள் வரத்து குறைவு

திங்கட்கிழமை, 26 ஜூன் 2017      திருச்சி
Image Unavailable

வேதாரண்யம் அருகே கோடியக்கரை பறவைகள் சரணாலயத்தில் ஆண்டு தோறும் ஆகஸட் முதல் பிப்ரவரி வரை உள்ள சீசன் காலங்களில் பிளம்மிங்கோ, உள்ளான், நாரை போன்ற வெளிநாட்டுப் பறவைகள் லட்சக்கணக்கில் வந்து செல்வது வழக்கம்

 

வெளிநாட்டுப் பறவைகள்

கடந்த ஆண்டு கோடை காலத்தில் பெய்த மழையினால் கோடியக்கரை பறவைகள் சரணாலயத்தில் உள்ள சதுப்பு நிலப்பகுதியில் மழைநீர் நிரம்பி சீசன் தொடங்குவதற்கு சில மாதங்களுக்கு முன்பே இங்கு வெளிநாட்டு பறவைகள் ஆயிரக்கணக்கில் வந்தன

 

ஆனால் இந்த ஆண்டு கோடை மழையில்லாததால் செங்கால் நாரை உள்ளிட்ட சில பறவைகள் மட்டும் கோடியக்காடு பம்பு ஹவுஸ் போன்ற சதுப்பு நில பகுதியில் உள்ள பறவைகள் சரணாலயத்தில் 30 முதல் 40 எண்ணிக்கையில் பறவைகள் வலம் வருகின்றன

இதனால் கடந்த ஆண்டைப் போல கோடை காலத்தில் அதிக எண்ணிக்கையில் பறவைகளை காணமுடியாமல் சுற்றுலாப் பயணிகள், இயற்கை ஆர்வலர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து