முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2050-ம் ஆண்டுவாக்கில் குப்பைகளை கொட்ட புதுடெல்லி அளவுக்கு இடம் தேவைப்படும் : அசோசேம் அறிக்கையில் தகவல்

திங்கட்கிழமை, 26 ஜூன் 2017      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : குப்பைகளை தரம்பிரித்து அதனை சரியாகக் கையாளத் தெரியாத நிலையில் 2050-ம் ஆண்டு வாக்கில் இந்தியாவில் குப்பைகளைக் கொட்ட புதுடெல்லி அளவுக்கு பெரிய இடம் தேவைப்படும் என்று தொழிற்துறை கூட்டமைப்பு அசோசேம் தெரிவித்துள்ளது.

இத்தகைய தேவையினால் “இப்பெரும் நிலப்பரப்புகள் வேறு பயன்களுக்கு பயன்படுத்த முடியாத உருப்படியற்ற நிலப்பகுதியாக இருக்கும். 2050-ல் 88 சதுர கிமீ நிலப்பரப்பு அதாவது புதுடெல்லி முனிசிபல் கவுன்சில் நிர்வாகத்துக்குக் கீழ் இருக்கும் நிலப்பரப்பு அளவுக்கு குப்பைகளைக் கொட்ட இடம் தேவைப்படும்” என்று இந்தியாவில் கழிவு மேலாண்மை: மாறும் நிலமைகள் என்ற ஆய்வறிக்கையில் அசோசேம் மற்றும் கணக்கியல் நிறுவனமான பிடபிள்யுசி கூறியுள்ளது.

இந்தியாவின் 50 சதவீத மக்கள் தொகை நகரப்பகுதிகளிலேயே வாழும் நிலை 2050-ல் ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ள நிலையில் கழிவு உற்பத்தி ஆண்டுக்கு 5சதவீதம் அதிகரிக்கும் என்று கணித்துள்ளது இந்த அறிக்கை.

2021- ம் ஆண்டில் கழிவுகளின் உற்பத்தி 101 மில்லியம் மெட்ரிக் டன்கள் என்றும் 2031-ல் 164 மெட்ரிக் டன்கள் என்றும் 2050-ல் இது 436 மெட்ரிக் டன்களாக அதிகரிக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

10 லட்சம் முதல் 50 லட்சம் வரை மக்கள் தொகை இருக்கும் முதல் அடுக்கு நகரங்கள் நாட்டின் மொத்த கழிவுகளில் 80 சதவீதம் கழிவுகளை உற்பத்தி செய்யும், என்கிறது இந்த அறிக்கை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து