முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

200 பேருந்து நிலையங்களில் சாலை பாதுகாப்பு குறும்படம் திரையிட தமிழக அரசு உத்தரவு

திங்கட்கிழமை, 26 ஜூன் 2017      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : தமிழகம் முழுவதும் 200 பேருந்து நிலையங்களில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறும்படங்களைத் திரையிட வேண்டுமென வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கு (ஆர்டிஓ) போக்குவரத்து ஆணை யரகம் உத்தரவிட்டுள்ளது.

போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையிலான ஆய்வுக் கூட்டம் சமீபத்தில் சென்னையில் நடந்தது. சாலை விபத்துகளைக் குறைக்கும் வகையில் சாலை விதிமுறைகளை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், போதிய அள வில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண் டுமென அமைச்சர் அறிவித்திருந் தார்.

இது தொடர்பாக போக்குவரத்து ஆணையரக அதிகாரிகள்  கூறியபோது, ‘‘சாலை விபத்துகளைக் குறைக்கும் வகையில் சாலை விதிமுறைகளை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளோம்.

மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினாலோ, சிவப்பு விளக்கை தாண்டினாலோ, அதிவேகமாக வாகனத்தை இயக்கினாலோ ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்யலாம். செல்போன் பேசியபடி வாகனம் இயக்கும் நபர்களின் ஓட்டுநர் உரிமத்தை நிரந்தரமாக ரத்து செய்யலாம் என முடிவெடுத்து அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் சென்னை, கோயம்புத்தூர், திருச்சி, மதுரை, சேலம், ஈரோடு உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட பேருந்து நிலையங்களில் போக்குவரத்து விழிப்புணர்வு குறும்படங்கள் திரையிட நட வடிக்கை எடுக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது’’ என்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து