முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பள்ளி, கல்லூரி அருகே போதை பொருள் விற்றால் குண்டர் சட்டம் பாயும் - சென்னை போலீஸ் கமி‌ஷனர் எச்சரிக்கை

திங்கட்கிழமை, 26 ஜூன் 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை : பள்ளி, கல்லூரி அருகில் போதை பொருட்களை விற்பவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் என்று சென்னை மாநகர போலீஸ் கமி‌ஷனர் ஏ.கே. விசுவநாதன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

விழிப்புணர்வு பேரணி

போதை பொருள் பயன்பாடு மற்றும் கடத்தல் எதிர்ப்பு நாள் கடைபிடிக்கப்பட்டது. கோயம்பேடு பஸ் நிலைய பகுதியில் இதுதொடர்பாக விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. போலீஸ் கமி‌ஷனர் ஏ.கே.விசுவநாதன் இந்த பேரணியை தொடங்கிவைத்தார். 100-க்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் போதை பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி சென்றனர்.

குண்டர் சட்டம்

நிகழ்ச்சியில் கமி‌ஷனர் ஏ.கே. விசுவநாதன் பேசியதாவது:-

போதை பழக்கத்திற்கு மாணவ - மாணவிகள் அடிமையாகி விடக்கூடாது. அதனால் ஏற்படும் பாதிப்புகளை தெரிந்துக் கொள்ள வேண்டும். பள்ளி, கல்லூரி ஆகியவற்றின் அருகில் போதை பொருட்கள் விற்கப்படுகிறதா? என்பது பற்றி எப்போதுமே கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். போதை பொருட்களை விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும். இவ்வாறு கமி‌ஷனர் ஏ.கே.விசுவநாதன் கூறினார்.

வட சென்னை கூடுதல் ஆணையர் ஜெயராம், மேற்கு மண்டல இணை ஆணையர்கள் சந்தோஷ்குமார், பிரேம் ஆனந்த் சின்கா, துணை ஆணையர்கள் திருநாவுக்கரசு, சுதாகர், ரூபேஷ்குமார் மீனா மற்றும் போலீஸ் அதிகாரிகள் பங்கேற்றனர்.போலீஸ் சிறார் மன்றத்தைச் சேர்ந்த மாணவ - மாணவிகள் விழிப்புணர்வு பேரணியில் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து