முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திருமங்கலம் அரசு மருத்துவமனையில் இரத்ததானமுகாம் அமைச்சர்கள் துவக்கி வைத்தனர்

திங்கட்கிழமை, 26 ஜூன் 2017      மதுரை
Image Unavailable

திருமங்கலம்-பாரதரத்னா எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு மதுரை மாவட்டம் திருமங்கலம் நகர் அரசு மருத்துவமனையில் நடைபெற்ற மாபெரும் இரத்ததான முகாமினை அமைச்சர்கள் விஜயபாஸ்கர்,ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

அ.தி.மு.க நிறுவன தலைவரும்,முன்னாள் முதல்வருமாகிய புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா தமிழக அரசின் சார்பில் வெகுவிமரிசையாக மாநிலம் முழுவதிலும் கொண்டாடப்படவுள்ளது.இதையொட்டு வரும் 30ம் தேதி மதுரை பாண்டிகோவில் அருகிலுள்ள அம்மா திடலில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கவுள்ள எம்.ஜி.ஆர் நூற்றாண்டு தொடக்கவிழா நிகழ்ச்சி லட்சக்கணக்கானோர் பங்கேற்புடன் எழுச்சியுடன் நடைபெறவுள்ளது.இந்நிலையில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டுவிழா நிகழ்ச்சியின் ஒருபகுதியாக மதுரை மாவட்டம் திருமங்கலம் நகர் அரசு மருத்துவமனையில் தமிழக அரசின் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள்,பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத்துறை சார்பில் மாபெரும் இரத்ததான முகாம் நடைபெற்றது.இந்த முகாமிற்கு மதுரை மாவட்ட கலெக்டர் கொ.வீரராகவராவ் தலைமை வகித்தார்.மதுரை அரசு மருத்துவமனை டீன் டாக்டர்.வைரமுத்து, இணை இயக்குனர் டாக்டர் ருக்மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருமங்கலம் அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவர் டாக்டர் பூமிநாதன் வரவேற்று பேசினார்.

திரளான பொதுமக்கள்,கட்சி நிர்வாகிகள் மற்றும் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்று இரத்ததானம் செய்த இந்த இரத்ததான முகாமை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்,தமிழக வருவாய்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் தொடங்கி வைத்து சிறப்புரை யாற்றினார்கள்.முதலாவதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது: புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு உலகமே வியந்திடும் வகையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தலைமையில் மதுரையில் மாபெரும் விழா நடைபெறவுள்ளது.எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவை கொண்டாடிட அம்மாவின் வழியில் வந்த நாங்கள் எம்.ஜி.ஆரின் புகழ்பாட எங்களின் உயிரினையும் தந்திடுவோம்.தற்போது மதுரை முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது.எம்.ஜி.ஆரின் நுற்றாண்டு விழா கொண்டாட்டத்தின் போது அ.தி.மு.க அரசு இருக்கவேண்டும் என்ற அம்மாவின் லட்சியம் நிறைவேறியுள்ளது.ஆனால் அம்மா மறைந்து விட்டார்கள்.ஆனால் தாயின் ஆசியுடன் தமிழகத்திற்கு பெருமை சேர்த்து தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்கும் ஒரே அரசு அம்மாவின் அரசு தான்.மக்களுக்கா பல்வேறு பணிகளை நாள்தோறும் செய்து வரும் ஒரே அரசு அம்மாவின் அரசு மட்டும் தான்.விரைவில் திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனைத்து வசதிகளும் விரைவில் செய்து தரப்பட்டு அதன் புகழும் கட்டிடங்களும் விண்ணை நோக்கி உயர்ந்து நிற்கும் என்று பேசினார்.

இதையடுத்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேசியதாவது: தமிழகத்தில் 200 படுக்கை வசதிகள் கொண்ட அரசு மருத்துவமனைகளின் சுகாதார பிரிவிற்கு அவுட்சோர்சிங் முறையில் பணியாளர்கள் நியமிக்கபட்டு வருகின்றனர்.இருப்பினும் 145 படுக்கை வசதி கொண்ட திருமங்கலம் அரசு மருத்துமனைக்கு அவுட்சோர்சிங் முறையில் சுகாதார பிரிவிற்கு பணியாளர்களை நியமித்திட உடனடியாக உத்தர விடப்படும்.அதே போல் எலும்பு முறிவு உள்ளிட்ட அனைத்து சிறப்பு மருத்துவர்கள் நியமனம்,அடிப்படை கட்டமைப்பு மற்றும் மருத்துவ வசதிகள் அனைத்தும் இந்த சட்டமன்ற கூட்டத் தொடரில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களின்அனுமதி பெற்று அறிவிக்கப்படும்.மதுரையில் எந்த காரியம் தொடங்கினாலும் அம்மாவின் நல்லாசியுடன் அது வெற்றி பெறும் என்பது நிச்சயம்.அதே போன்று மதுரையில் துவங்கவுள்ள எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா தமிழகத்தின் வரலாற்றை புரட்டிப் போடுகிறன்ற அளவிற்கு வரலாற்றில் இடம் பிடித்திடும்.

தற்போது சென்னை மருத்துவத்தின் தலைநகராக உள்ளது.மருத்துவத்தின் இரண்டாவது தலைநகராக மதுரையை கொண்டு வந்திட தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.இதற்காக மதுரையில் 150கோடி மதிப்பீட்டில் சூப்பர் ஸ்பெசாலிட்டி மருத்துவமனை கட்டி முடிக்கப்பட்டுள்ளது.அதே போல் தென்மாவட்ட மக்கள் பயன்பெற்றிடும் வகையில் 50கோடி செலவில் அதிநவீன மகப்பேறு மையம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.இதை தொடர்ந்து ஜப்பான் நாட்டு நிறுவனத்துடன் செய்து கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி ஜெய்கா திட்டத்தின் கீழ் 1634கோடி மதிப்பீட்டில் சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனை,மதுரை அரசு மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு மருத்துவமனைகள் அதிநவீன படுத்தப்படவுள்ளது.மதுரை அரசு மருத்துவமனையில் 350கோடி செலவில் 16ஆப்பரேசன் தியேட்டர்கள்,1எம்.ஆர்.ஐ,1சி.டி ஸ்கேன் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் சர்வதேச மருத்துவ தரத்திற்கு இணையாக மேம்படுத்தப்பட வுள்ளது.தற்போது மதுரைக்கு மட்டும் 550கோடிமதிப்பீட்டில் மருத்துவ வசதிகள் அரசினால் செய்து தரப்பட்டு வருகிறது.இந்த பணிகள் அனைத்தும் நிறைவு பெற்றிடும் போது தென்மாவட்ட மக்களுக்கு இது வரப்பிரசாதமாக அமைந்திடும். இவற்றுக்கெல்லாம் மேலாக 5 தென்மாநிலங்களுக்கு மத்தியில் 203கோடி மதிப்பீட்டில் மெட்ரோ பிளட் பேங்க் எனும் மாபெரும் ரத்தவங்கி சென்னையில் ஆரம்பிக்கப்படவுள்ளது என்பதை மகிழச்சியுடன் திருமங்கலம் நகரில் வைத்து தெரிவித்துக் கொள்கிறேன் என்று பேசினார்.

முன்னதாக அமைச்சர்கள் விஜயபாஸ்கர்,ஆர்.பி.உதயகுமார்,மதுரை புறநகர் மாவட்ட கழகச் செயலாளர் வி.வி.ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ.,ஆகியோர் கட்சி நிர்வாகிகளுடன் சென்று திருமங்கலம் அரசு மருத்துவமனையின் அனைத்து பகுதிகளையும் நேரில் பார்வையிட்டு நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தனர்.இவ்விழாவில் முன்னாள் மாவட்ட செயலாளர் ஜெயராமன்,மாவட்ட துணைச் செயலாளர் அய்யப்பன்,சார்புஅணி நிர்வாகிகள் தமிழ்ச்செல்வம்,திருப்பதி,வக்கீல்ரமேஷ்,திருமங்கலம் நகரச் செயலாளர் விஜயன்,திருமங்கலம் ஒன்றிய செயலாளர் அன்பழகன்,முன்னாள் திருமங்கலம் யூனியன் சேர்மன் தமிழழகன்,கள்ளிக்குடி ஒன்றிய செயலாளர் மகாலிங்கம்,கல்லுப்பட்டி ஒன்றிய செயலாளர் ராமசாமி,மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற துணைச் செயலாளர் ஆண்டிச்சாமி,திருமங்கலம் அவைதலைவர் ஜஹாங்கீர்,முன்னாள் நகர் மன்ற துணைதலைவர் சதீஸ்சண்முகம்,திருமங்கலம் ஒன்றிய துணை செயலாளர்கள் சுகுமார்,சுமதிசாமிநாதன்,பேரூர் கழகச் செயலாளர்கள் நெடுமாறன்,பாலசுப்பிரமணியன்,முன்னாள் பேரூராட்சி தலைவர் மாணிக்கம் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து