முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராமநாதபுரம் மாவட்டத்தில் ரம்ஜான் சிறப்பு தொழுகையில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

திங்கட்கிழமை, 26 ஜூன் 2017      ராமநாதபுரம்
Image Unavailable

ராமநாதபுரம்,-ராமநாதபுரம் மாவட்டத்தில் ரம்ஜான் பண்டிகையையொட்டி நடைபெற்ற சிறப்பு தொழுகையில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

    இஸ்லாமியர்களின் புனித ரமலான் மாதத்தினையொட்டி கடந்த 30 நாட்களாக முஸ்லீம்கள் ஒவ்வொருவரும் நோன்பு இருந்து உண்ணாமல் பருகாமல் கடும் நோன்புகடைப்பிடித்து வந்தனர். முஸ்லீம்களின் புனித நூலான திருக்குர் ஆன் ஏக இறைவனால் அருளப்பட்ட நாள் என்பதால் 27-வது நோன்பை  லைலத்துல்கத்ரு எனப்படும் புனித இரவை கொண்டாடினர். இதனை தொடர்ந்து ரமலான் பண்டிகைக்காக பிறை தென்பட்டதை தொடர்ந்து தமிழக தலைமை ஹாஜியின் அறிவிப்பின்படி ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் நேற்று ரம்ஜான் பண்டிகை வெகு விமர்சையாக கோலாகலமாக கொண்டாடப்பட்டது. ராமநாதபுரத்தில் மதுரை ரோட்டில் பரந்து விரிந்த பரப்பளவில் உள்ள ஈதுகா கோரித்தோப்பு மைதானத்தில் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடைபெற்றது. நகரில் உள்ள அனைத்து ஜமாத்தார்கள் சார்பில் நடைபெற்ற இந்த சிறப்பு தொழுகையில் பல்லாயிரக்கணக்கானோர் புத்தாடை அணிந்து மகிழ்ச்சியுடன் கலந்து கொண்டனர். இதில் உலக நன்மைக்காகவும், மழைவேண்டியும், அமைதி நிலவவும் வேண்டி சிறப்பு தொழுகை நடத்தப்பட்டது. சிறப்பு தொழுமையின் முடிவில் சிறியவர் முதல் பெரியவர் வரை ஒருவரையொருவர் கட்டித்தழுவி பெருநாள் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்.

    நோன்பு பெருநாளை ஈகைதிருநாளாக கொண்டாட வேண்டும் என இஸ்லாமிய மார்க்கத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளதால் தங்களது ஆண்டு வருமானத்தில் 2.5 சதவீதத்தினை கணக்கிட்டு ஏராளமான ஏழைகளுக்கு தானதர்மங்களை முஸ்லீம்கள் வழங்கினர். சிறப்பு தொழுகைக்கு முன்னதாக பித்ரா எனப்படும் ஏழை வரியை நலிந்தவர்களுக்கு வழங்கினர். இதேபோல, ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் மதரசா மற்றும் பெண்களுக்காக ஒதுக்கப்பட்ட இடங்களில் ஏராளமான பெண்கள் திரண்டு சிறப்பு தொழுகையில் கலந்து கொண்டனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் கீழக்கரை, பெரியபட்டிணம், ஏர்வாடி, சாத்தான்குளம், அழகன்குளம், பனைக்குளம், சித்தார்கோட்டை, வாணி, புதவலசை, புதுமடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ராம்ஜான் பண்டிகையையொட்டி சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான முஸ்லீம்கள் கலந்து கொண்டனர். இந்த சிறப்பு தொழுகையின் முடிவில் உலக அமைதிக்காக சிறப்பு பிரார்த்தணை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான முஸ்லீம்கள் கலந்து கொண்டு சிறப்பு தொழுகை நடத்தினர். ரம்ஜான் பண்டிகையையொட்டி ஒவ்வொருவர் வீட்டிலும் பிரியாணி கறிவிருந்து தயார் செய்யப்பட்டு உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், ஏழை எளியவர்களுக்கும் வழங்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து