முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜூனியர் உலக துப்பாக்கி சூடுதல்: இந்தியாவின் யஷ்ஸ்வினிசிங் தேஷ்வார் தங்கம் வென்றார்

திங்கட்கிழமை, 26 ஜூன் 2017      விளையாட்டு
Image Unavailable

சூல் : ஜெர்மனியின் சூல் நகரில் நடைபெற்று வரும் ஜூனியர் உலக துப்பாக்கி சூடுதல் போட்டியில் பெண்களுக்கான 10 மீட்டர் ஏர்பிஸ்டல் பிரிவில் முதன் முறையாக இந்திய வீராங்கனை யஷ்ஸ்வினிசிங் தேஷ்வால் தங்கம் வென்றார்.

235.9 புள்ளிகளுடன் ...

ஜெர்மனியில் உள்ள சூலில் சர்வதேச துப்பாக்கி சுடும் விளையாட்டு கூட்டமைப்பின் சார்பில் ஜூனியர் பிரிவினருக்கான உலக சாம்பியன் போட்டி கடந்த சனிக்கிழமை தொடங்கியது. இதில் இரண்டாம் நாளில் பெண்களுக்கான 10 மீட்டர் ஏர்பிஸ்டல் பிரிவில் இந்திய வீராங்கனை யஷ்ஸ்வினிசிங் தேஷ்வால் தங்கம் வென்றார். அவர் 235.9 புள்ளிகள் பெற்று முதலிடத்தை பிடித்தார். கொரிய வீராங்கனை கிம்வூரி 2-வது இடத்தை (231.8 புள்ளி) பிடித்தார்.

முதன் முறையாக ....

கடந்த மூன்று ஆண்டுகளில் இதுவரை 9 முறை இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருந்த தேஷ்வால், தற்போது முதன் முறையாக தங்கம் வென்றுள்ளார். இதன் மூலம் இந்திய அணி பதக்க பட்டியலில் 2-வது இடத்திற்கு முன்னேறுவதற்கு தேஷ்வால் உதவியுள்ளார். சீனா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. இந்திய வீரர்கள் இதுவரை 2 தங்கம், தலா ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் பதக்கம் வென்றுள்ளனர். முதல் நாளில் ஜூனியர் ஆண்களுக்கான 25 மீட்டர் துப்பாக்கிச் சுடும் போட்டியில் அனிஷ் பன்வாலா இரண்டு தங்கங்களை வென்று அசத்தினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து