முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்க அதிபர் டிரம்ப், மோடியின் அழைப்பை ஏற்று இந்தியா வருகிறார்: இந்திய வெளியுறவுத்துறை தகவல்

செவ்வாய்க்கிழமை, 27 ஜூன் 2017      உலகம்
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : அமெரிக்க அதிபர் டிரம்ப், மோடியின் அழைப்பை ஏற்று இந்தியா வர ஒப்புதல் தெரிவித்துள்ளளதாக இந்திய வெளியுறவுத்துறை கூறி உள்ளது.

2 நாள் சுற்று பயணம்

அமெரிக்காவுக்கு 2 நாள் சுற்று பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடிக்கு வெள்ளை மாளிகையில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் மோடியை அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலெனியா டிரம்ப் ஆகியோர் வரவேற்றனர். பிரதமர் மோடி மற்றும் அதிபர் டொனால்டு டிரம்ப் இடையே நீண்ட நேர பேச்சுவார்த்தை நடைபெற்றது. இருவரும் நீண்ட நேரம் தனியாகவும் பேசிக்கொண்டார்கள்.

பிரதமர் மோடி அழைப்பு

வெள்ளை மாளிகையின் ரோஸ் கார்டனில் பேசிய பிரதமர் மோடி,  “நீங்கள்  குடும்பத்துடன் இந்தியாவிற்கு வர அழைப்பு விடுக்க விரும்புகிறேன். உங்களை இந்தியாவில் வரவேற்கவும், விருந்து வழங்கவும் எனக்கு வாய்ப்பு வழங்குவீர்கள் என நம்புகின்றேன்,” என கூறினார்.

இந்தியா வர ஒப்புதல்

பிரதமர் மோடி டிரம்ப் சந்திப்பு குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்பில் வெளியிடபட்டு உள்ள அறிக்கையில் அமெரிக்க அதிபர் டிரம்ப், மோடியின் அழைப்பை ஏற்று இந்தியா வர ஒப்புதல் தெரிவித்துள்ளளதாக கூறப்பட்டுள்ளது.

என்.எஸ்.ஜி. விவகாரம் ...

இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் ஜெய்சங்கர் இது குறித்து தெரிவித்ததாவது:- "பிரதமர் மோடி - அதிபர் டிரம்ப் சந்திப்பு சுமூகமாக இருந்தது. இந்த சந்திப்பு அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கு பெரும் நன்மைகளை அளிக்கும். பயங்கரவாத ஓழிப்பு, என்.எஸ்.ஜி., ஜ.நா. பாதுகாப்பு கவுன்சில் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து இரு தலைவர்களும் பேசினர். இரு நாட்டு வர்த்தகம் குறித்தும் பேசினர்.

குற்றவாளிகளை ஓப்படைக்க ...

பதான் கோட் தாக்குதலில் குறித்து குறிப்பிட்ட பிரதமர் மோடி பாக்., தனது நாட்டில் பயங்கர வாதத்தை வளர்ப்பதை நாம் அனுமதிக்க கூடாது என்றார். சையத் சலாஹூதீன் சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டது. இதற்காக நல்ல துவக்கமாக கருதுகிறோம்.

மேலும் மும்பை தாஜ் ஓட்டல் தாக்குதல், பதான் கோட் தாக்குதல், உள்ளிட்ட எல்லை தாண்டிய தாக்குதலில் தொடர்புடைய குற்றவாளிகளை இந்தியாவிடம் ஓப்படைக்க பாக்.,கிற்கு கோரும் விவகாரமும் விவாதிக்கப்பட்டது. இந்தியா வர டிரம்பிற்கு மோடி விடுத்த அழைப்பை அவர் ஏற்றுக்கொண்டார்" என்று அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து