முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சபாநாயகராக இருந்தபோது நான் ஒருசார்பாக செயல்பட்டேன் என யாரும் குற்றம் சாட்டவில்லை : ஜனாதிபதி வேட்பாளர் மீரா குமார் பேட்டி

செவ்வாய்க்கிழமை, 27 ஜூன் 2017      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : நான் சபாநாயகராக இருந்த போது ஒரு சார்பாக செயல்பட்டேன் என யாரும் குற்றம் சாட்டவில்லை என காங். தலைமையிலான எதிர்க்கட்சி சார்பில் ஜனாபதி வேட்பாளராக போட்டியிடும் மீரா குமார் தெரிவித்துள்ளார்.

மாறி மாறி ட்விட்....

ஜனாதிபதி தேர்தலில் பாரதீய ஜனதா கூட்டணி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ராம்நாத் கோவிந்த், தனது வேட்புமனுவை தாக்கல் செய்து உள்ளார். காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் முன்னாள் மக்களவை சபாநாயகர் மீரா குமாரை வேட்பாளராக நிறுத்தி உள்ளது. தலித் பிரிவை சேர்ந்த இருவர் போட்டி என செய்திகள் பரவிய நிலையில் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் பழைய மக்களவை வீடியோ ஒன்றை ட்விட் செய்து, என்னை மீரா குமார் நடத்தி விதம் இப்படிதான் என குறிப்பிட்டு இருந்தார். என்னுடைய 6 நிமிட பேச்சில் 60 முறை குறுக்கிட்டார் எனவும் குறிப்பிட்டார். சுஷ்மா சுவராஜ் ட்விட்டிற்கு பதிலளிக்கும் விதமாக காங்கிரஸ் அவர், மீரா குமாரை பாராட்டும் வீடியோவை வெளியிட்டது.

எதிர்கொள்வோம்

இந்நிலையில் டெல்லியில் நேற்று செய்தியாளர்களிடம் மீரா குமார் பேசினார். மீரா குமார் பேசுகையில்,  ஜனநாயகம் வழங்கும் உரிமைகளை கொண்டு ஜனாதிபதி தேர்தலை எதிர்கொள்வோம். உள்ளடங்கிய வளர்ச்சி, ஏழ்மைக்குக்கு முற்றுப்புள்ளி, சாதிய பாகுபாடுகளை அழித்தல் ஆகியவற்றை முதன்மையாக கொண்டு தேர்தலை எதிர்க்கொள்வோம். குஜராத் மாநிலம் சபர்மதி ஆசிரமத்தில் இருந்து ஜனாதிபதி தேர்தல் பிரசாரம் தொடங்கும். ஜனாதிபதி தேர்தலானது தலித்கள் இடையே ஆன போட்டி என பார்க்கப்படுகிறது. இந்த முறையானது புதைக்கப்பட வேண்டும்.

நான் மக்களவை சபாநாயகராக இருந்த போது அனைத்து எம்.பி.க்களும் என்னுடைய செயல்பாட்டை பாராட்டினார்கள். நான் ஒரு சார்பாக செயல்பட்டதாக யாரும் குற்றம் சாட்டவில்லை என்றார்.  பொதுவான கொள்கையின் அடிப்படையில் எதிர்க்கட்சிகள் ஒன்றாக இணைந்து உள்ளன எனவும் மீரா குமார் குறிப்பிட்டு உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து