முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அடுத்த ஆண்டு முதல் நிதி ஆண்டின் தொடக்கம் ஜனவரிக்கு மாறுகிறது

செவ்வாய்க்கிழமை, 27 ஜூன் 2017      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : அடுத்த ஆண்டு முதல் ஏப்ரல் மாதம் தொடங்கும் நிதி ஆண்டின் தொடக்கம் ஜனவரி மாதத்திற்கு மாறுகிறது.

பிரதமர் விருப்பம்

தற்போது, ஏப்ரல் மாதம் முதல் அதற்கடுத்த ஆண்டின் மார்ச் மாதம்வரை, நிதி ஆண்டு கடைப்பிடிக்கப்படுகிறது. 1867–ம் ஆண்டு ஆங்கிலேயர்கள் இந்த வழக்கத்தை கொண்டு வந்தனர். இதற்கிடையே, காலண்டர் ஆண்டைப் (ஜனவரி–டிசம்பர்) போலவே, நிதி ஆண்டையும் ஜனவரி மாதம் தொடங்குவது போல் மாற்ற பிரதமர் நரேந்திர மோடி விருப்பம் தெரிவித்தார்.

உயர்மட்ட குழு

அதையடுத்து, இதுபற்றி ஆராய உயர்மட்ட குழு ஒன்று அமைக்கப்பட்டது. அக்குழு கடந்த டிசம்பர் மாதம் தனது அறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பித்தது. நிதி ஆண்டின் தொடக்கத்தை ஜனவரி மாதத்துக்கு மாற்ற ‘நிதி ஆயோக்’ அமைப்பும் ஆதரவு தெரிவித்தது. பாராளுமன்ற நிலைக்குழுவும் சிபாரிசு செய்தது.

அடுத்த ஆண்டு முதல் ...

இந்நிலையில், அடுத்த ஆண்டு முதல், நிதி ஆண்டின் தொடக்கத்தை ஜனவரி மாதத்துக்கு மாற்றும் யோசனை, மத்திய அரசின் தீவிர பரிசீலனையில் இருக்கிறது. இத்தகவலை மத்திய அரசின் உயர் வட்டாரங்கள் தெரிவித்தன. பொதுவாக, பட்ஜெட் தாக்கல் செய்த பிறகு, அது தொடர்பான நடைமுறைகளை முடிப்பதற்கு 2 மாதங்கள் தேவைப்படும். எனவே, அடுத்த ஆண்டுக்கான பட்ஜெட்டை நவம்பர் மாதம் முதலாவது வாரத்திலேயே தாக்கல் செய்வது பற்றியும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

150 ஆண்டு கால ...

இதன்மூலம், 150 ஆண்டு கால வழக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுகிறது. இது, வரலாற்று சிறப்புமிக்க மாற்றமாக கருதப்படுகிறது. ஏற்கனவே, பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் தேதியை பிப்ரவரி 28-ம் தேதிக்கு பதிலாக, பிப்ரவரி 1-ம் தேதிக்கு மோடி அரசு மாற்றியது, குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து