முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எங்களை எதிர்க்கும் கருவியாக இந்தியாவை அமெரிக்கா பயன்படுத்துகிறது: சீனா விமர்சனம்

செவ்வாய்க்கிழமை, 27 ஜூன் 2017      உலகம்
Image Unavailable

பெய்ஜிங், மோடி - டிரம்ப் சந்திப்பு சீனாவை எதிர்க்கும் கருவியாக இந்தியாவை அமெரிக்கா பயன்படுத்தப்படுகிறது என சீன முன்னணி நாளிதழ் குளோபல் டைன் கூறி உள்ளது.

குளோபல் டைம்

சீனாவின் முன்னணி நாளிதழான குளோபல் டைம் தனது தலையங்கத்தில் கூறி இருப்பதாவது:-
புதுடெல்லியுடன் நெருக்கமான உறவுகளை வாஷிங்டன் மேற்கொள்வது முக்கியமாக சீனாவை இலக்காக்காக வைத்து இந்தியாவை ஒரு கருவியாக்க திட்டமிட்டு உள்ளது. இந்தியாவைப் தன்வசப்படுத்த பாரக் ஒபாமாவின் ஆட்சிக் காலத்தில், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவை ஆதரிப்பதாக அவர் உறுதியளித்தார். ஆனால் எந்த நடைமுறை நடவடிக்கையையும் செய்யவில்லை.  இந்தியாவின் ஐ.என்.எஸ்.சி.சி முயற்சியை எளிதாக்குவதற்கு டிரெம்ப் கணிசமான நடவடிக்கைகளை எடுப்பார்.

எச்சரிக்கை தேவை

பயங்கரவாதக் குழுக்களின் ஆதரவளிப்பதாக கூறி டிரம்ப் பாக்கிஸ்தானுக்கு அதிக அழுத்தம் கொடுக்கிறார். பதில் எதிர்மறையாக இருக்ககூடும். இந்தியா அமெரிக்காவால் பயன்படுத்தப்படுகிறது என்ற உண்மையை இந்தியர்கள் பெருமையாக உணர்கிறார்கள் என சீன தினசரி பரிகாசம் செய்துள்ளது. அமெரிக்கா இந்தியாவை பயன்படுத்துவது பெருமை அளிக்க கூடியது அல்ல. இது ஒரு பொறி என இந்தியா எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என கூறி உள்ளது.

எல்லை தாண்டி ...

மோடி-டிரம்ப் சந்திப்பதற்கு முன்பு இந்த தலையங்கம் வெளியிடப்பட்டது. இந்தியா  சீனாவுடன் ஒரு உறுதியான உறவை பராமரிப்பது அதன் பாதுகாப்பு மற்றும் அபிவிருத்திக்காக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும் என அந்த பத்திரிகை கூறி உள்ளது. நேற்று முன்தினம் சிக்கிம் எல்லையில், சில இந்திய மற்றும் சீன வீரர்கள் நேருக்கு நேர் சந்திக்க நேரிட்டது, அந்த செய்தி ஊடகம் மற்றும் இரு நாடுகளிலும் சூடான ஊடக விவாதங்களை உருவாக்கியுள்ளது. இரு நாடுகளும்  கட்டுபாட்டை மீறி உள்ளதாக அதிகாரப்பூர்வமாக குற்றம் சாட்டியுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து