முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜி.எஸ்.டி வரி விதிப்பில் இருந்து விலக்கு அளிக்க கோரி விசைத்தறி நெசவாளர்கள் ஊர்வலம்

செவ்வாய்க்கிழமை, 27 ஜூன் 2017      விருதுநகர்
Image Unavailable

அருப்புக்கோட்டை - விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை ஜவுளி உற்பத்திக்கு பெயர் பெற்றது.  சுமார் 25ஆயிரத்துக்கும் மேற்ப்பட்டோர் ஜவுளி உற்பத்தி மற்றும் அதை சார்ந்த தொழில் செய்து வருகின்றனர்.  அருப்புக்கோட்டையில் உற்பத்தி செய்யும் ஜவுளி ரகங்கள் இந்தியாவில் அனைத்து மாநிலங்களுக்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் விலை மலிவாகவும் எளிமையாகவும் இருப்பதால் திரைப்பட துறையினரும் அதிக அளவில் அருப்பக்கோட்டையில் ஜவுளிகளை வாங்கிச் செல்கின்றனர் இதற்கு முன் 1947-ல் இருந்து மத்திய மாநிலஅரசு ஜவுளி ரகங்களுக்கு எந்தவிதமான வரியும் விதிக்கப்படவில்லை. ஜவுளி ரகங்களுக்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது மத்திய அரசு கொண்டு வந்துள்ள ஜீ.எஸ்.டி வரிவிதிப்பில் ஜவுளி ரகங்களுக்கு 5மூ வரியும் நூல் சிட்டத்திற்கு 5மூ; ஒப்பந்த பாவு ரகங்களுக்கு 5மூ சாயப்பவுடர் 18மூ தொழிலாளருக்கு 5மூ என பல வரிவிதிப்புகளை அறிவித்துள்ளது.  மேலும் உற்பத்திக்காக வாங்கப்படும் பொருட்களை மாதம் மூன்று முறை கொள்முதல் மற்றும் விற்பனையை வணிகவரித்துறையில் ஆன்லைனில் தாக்கல் செய்யவும் கூறியுள்ளனர்.  பெரும்பாலான நெசவாளர்கள் படிப்பாற்றல் குறைவாக உள்ளனர்.  இவர்கள் எப்படி மாதம் மூன்று முறை ரிட்டர்ன் தாக்கல் செய்யமுடியும் என புலம்பிவருகின்றனர் இதனால் விசைத்தறி நெசவு நலிவடைந்து நெசவாளர் வாழ்வாதாரம் பாதிக்கும் நிலை இந்த ஜீ.எஸ்.டி வரிவிதிப்பால் ஏற்பட்டுள்ளது. எனவே விசைத்தறி ஜவுளி ரகங்களுக்கு விதிக்கப்பட்ட ஜி.எஸ்.டி வரிவிதிப்பை ரத்து செய்ய கோரி மாநில அரசு மத்திய அரசை வலியுறுத்தி விசைத்தறி நெசவாளர்கள் பாவடித் தோப்பில் இருந்து விசைத்தறி சங்கத்தலைவர் முருகன் தலைமையில், தொழிலதிபர்கள் சவுண்டையா, கணேசன், முருகன், அண்ணாத்துரை ஆகியோர்களின் முன்னிலையில் விசைத்தறி நெசவாளர்கள் நகரின் முக்கிய வீதி வழியாக ஊர்வலமாக சென்று அருப்புக்கோட்டை தாசில்தார் ரமணனிடம் ஜி.எஸ்.டி வரிவிதிப்பை ரத்துசெய்ய மாநில அரசு மூலம் மத்திய அரசை வலியுறுத்த கோரி கோரிக்கை மனு கொடுத்தனர். மேலும் விசைத்தறி நெசவாளர்களின் வீட்டின் முன்பு ஜி.எஸ்.டி. வரிவிதிப்பை கண்டித்து, 28-06-2017 (புதன்கிழமை) அனைவருக்கும் கருப்புக்கொடி கட்ட முடிவு செய்யப்பட்டது. ஊர்வலத்தின் நிறைவாக விசைத்தறி சங்க செயலாளர் அறிவானந்தம் ஜி.எஸ்.டி. வரிவிதிப்பால் விசைத்தறி சங்க நெசவாளர்களுக்கு ஏற்படும் விளைவுகள் குறித்து விளக்கி பேசியும், ஊர்வலத்தில் கலந்து கொண்ட நெசவாளர்களுக்கு நன்றி தெரிவித்தும் பேசினார். அதன்பின் ஜி.எஸ்.டி வரிவிதிப்பை ரத்து செய்ய கோரி மாநில அரசு மத்திய அரசை வலியுறுத்தி கோரிக்கை மனு மாவட்ட ஆட்சியரிடம் விசைத்தறி சங்க நிர்வாகிகள் கே.எஸ்.எஸ்.சவுண்டையா தலைமையில் மனு கொடுத்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து