முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில்எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்புகளுக்குவிண்ணப்பங்கள் வினியோகம்

செவ்வாய்க்கிழமை, 27 ஜூன் 2017      தேனி
Image Unavailable

 ஆண்டிப்பட்டி,- தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்புகளுக்கான
 விண்ணப்பங்கள் வினியோகம் செய்யும் பணி நேற்று தொடங்கியது. மாணவ&மாணவிகள் ஆர்வத்துடன்
 விண்ணப்பங்களை வாங்கி சென்றனர்.
 தமிழ்நாட்டில் பிளஸ்2 அரசு பொதுத்தேர்வின் முடிவுகள் கடந்த மே மாதம்  வெளியானது. இந்த ஆண்டு முதல்  மருத்துவபடிப்புகளுக்கு நீட் நுழைவுத்தேர்வு  நடைபெற்றது. இந்த நீட் தேர்விற்கு தமிழக மாணவ&மாணவிகள் கடும்எதிர்ப்பு தெரிவித்த நிலையில் பல்வேறு எதிர்ப்புகளையும் மீறி நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டது. நீட் தேர்வு காரணமாக இந்த ஆண்டுக்கான மருத்துவபடிப்புகளுக்கான விண்ணப்பங்கள் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில் நீட் தேர்வு முடிவுகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்ட நிலையில் தமிழ்நாட்டில் செயல்படும் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் எம்.பி.பி.எஸ் உள்ளிட்ட மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் வினியோகம் செய்யும் பணி தொடங்கியது. நீட் தேர்வில் தேவையான கட்&ஆப் மார்க் எடுத்திருக்கும் மாணவ&மாணவிகள் மருத்துவ படிப்புகள் படிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நேற்று எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் (பல் மருத்துவம்) விண்ணப்பங்கள் வினியோகம் செய்யும் பணி தொடங்கியது.   மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் வழங்கும் பணியினைதேனி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் டாக்டர் திருநாவுக்கரசு தொடங்கி வைத்தார். இதுகுறித்து கல்லூரி முதல்வர் டாக்டர் திருநாவுக்கரசு கூறியதாவது, சென்னை செலக்சன் கமிட்டி என்ற பெயரில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில்  ரூ.500&க்கு டிமாண்ட் டிராப்ட் எடுத்து வந்து மருத்துவப்படிப்புகளுக்கானவிண்ணப்பபடிவங்களைபெற்றுக்கொள்ளம். ஆதிதிராவிடர்மற்றும்பழங்குடியின மாணவர்கள் சான்றொப்பம் இடப்பட்ட ஜாதி சான்றிதழ்களை கொண்டுவந்து இலவசமாக விண்ணப்ப படிவங்களை பெற்றுக் கொள்ளலாம். தேனி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நிர்வாக அலுவலகத்தில் மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் அடுத்த மாதம் 7&ந்தேதி (வெள்ளிக்கிழமை) வரை வினியோகம் செய்யப்படுகிறது.தினமும் காலை 10 மணிமுதல் 5 மணிவரையில் விண்ணப்பங்கள் வினியோகம் செய்யப்படும். பெறப்பட்ட விண்ணப்பங்களைமாணவர்கள் முறையாக பூர்த்தி செய்து  சென்னை தேர்வு கமிட்டிக்கு அனுப்பி வைக்கவேண்டும். இவ்வாறு கல்லூரி முதல்வர் டாக்டர் திருநாவுக்கரசு தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து