முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இஸ்லாமிய நாடுகளுக்கு பயணத்தடை விதித்த விவகாரம்: அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் டிரம்பிற்கு வெற்றி

செவ்வாய்க்கிழமை, 27 ஜூன் 2017      உலகம்
Image Unavailable

வாஷிங்டன் : இஸ்லாமிய நாடுகளுக்கு பயணத்தடை விதித்த விவகாரத்தில், அமெரிக்க உச்ச நீதிமன்றம் அதிபர் டிரம்பின் கொள்கைக்கு ஆதரவாக ஆணையிட்டுள்ளது.

நீதிமன்றங்கள் தடை

டிரம்ப் பதவியேற்ற பின்பு ஆறு இஸ்லாமிய நாடுகளுக்கு பயணத்தடை, கட்டுப்பாடுகளை 90 நாட்களுக்கு விதித்தார். இதன் மூலம் அந்நாட்டினர் அமெரிக்காவிற்கு சகஜமாக வந்து செல்வது தடைப்பட்டது. எனினும், கீழமை நீதிமன்றங்கள் இந்த ஆணைக்கு தடை விதித்தன.

72 மணி நேரத்தில் தடை

இச்சூழ்நிலையில் அமெரிக்க உச்ச நீதிமன்றம் டிரம்ப் அரசு இந்த ஆணையை அமல்படுத்தலாம் என்று அனுமதித்துள்ளது. அதிபர் டிரம்ப் கடந்த வாரம் நீதிமன்றம் அனுமதித்தால் அடுத்த 72 மணி நேரத்தில் தடை அமலுக்கு வரும் என்றார்.  இத்தடையே அதிபர் டிரம்பின் பதவியேற்ற குறுகிய காலத்தில் அதிக சர்ச்சையை ஏற்படுத்திய சட்ட விவகாரம் ஆகும். நீதிமன்றம் மேற்கொண்டு வழக்கின் வாதங்களை கேட்கவுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து