முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரமலான் பண்டிகையை முன்னிட்டு உலக அமைதிக்காகவும், மழை வேண்டியும் சிறப்பு தொழுகை

புதன்கிழமை, 28 ஜூன் 2017      திண்டுக்கல்
Image Unavailable

 திண்டுக்கல், -திண்டுக்கல்லில் ரமலான் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமியர்கள் பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடத்தினர். மேலும் உலக அமைதிக்காகவும், மழை பெய்யவும் வேண்டினர்.

இஸ்லாமியர்களின் புனித பண்டிகையான ஈகைத்திருநாள் நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. திண்டுக்கல் பேகம்ஞீர் பெரிய பள்ளிவாசலில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர். தொழுகை முடிந்தவுடன் ஒருவருக்கொருவர் கட்டித்தழுவி ரமலான் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டனர்.சிறுவர், சிறுமிகளும் தங்கள் அன்பை பரிமாறிக் கொண்டனர்.

இதேபோன்று முகமதியார்புரம், நாகல்நகர், ஆர்.எம்.காலனி, ரவுண்ட் ரோடு உள்ளிட்ட பல்வேறு பள்ளிவாசல்களில் சிறப்புதொழுகை நடைபெற்றது. செல்லாண்டியம்மன் கோவில் முதல் தெருவில் உள்ள சமதியா பள்ளிவாசலில் இருந்து அந்த பகுதியில் இருந்த இஸ்லாமிய பெருமக்களும், கருணாநிதி நகரைச்சேர்ந்த இஸ்லாமிய பெருமக்களும் ஏராளமானோர் ஊர்வலமாக சென்று அருகிலுள்ள ஈத்கா மைதானத்திற்கு சென்று ஈதுல் பித்ர் தொழுகையை நிறைவேற்றினர். பள்ளிவாசல் இமாம் ஹாஜி முகம்மது நஸ்ருதீன் தொழுகை நடத்தி விட்டு உலக அமைதிக்காகவும், மழை பெய்ய வேண்டியும் பிரார்த்தனை செய்தார். தொழுகைக்கான ஏற்பாடுகளை பள்ளிவாசல் மூத்தவல்லி ஹெச்.ஏ.முகமது அலி, செயலாளர் ஹாஜி ஜே.முகம்மது ரஹ்மத்துல்லா மற்றும் உதவி செயலாளர் ஏ.வி.முகம்மது சுல்தான் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர். இறுதியாக மூத்தவல்லி எச்.ஏ. முகம்மது அலி சிறப்பு தொழுகையில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து