முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆண்டிபட்டி பகுதியில் சுழற்றியடித்த சூறாவளி காற்றில் உருக்குலைந்த வைகை அணை பூங்கா

புதன்கிழமை, 28 ஜூன் 2017      தேனி
Image Unavailable

ஆண்டிபட்டி -தேனி மாவட்டம் ஆண்டிபட்டி சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு பலத்த சூறாவளி காற்றுடன் கூடிய மழை பெய்தது.இந்த சூறாவளிக்காற்றில் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை பூங்க உருக்குலைந்தது.பூங்க பகுதியில் வளர்ந்திருந்த மரங்கள் வேரோடு பெயர்ந்து சாய்ந்தது.மேலும் அணையில் அமைக்கப்பட்டு இருந்த மின்சார விளக்குகள்,மின்கம்பங்கள் உடைந்து விழுந்தது.இதனால் வைகை அணை சுற்றுவாட்டார பகுதியில் மின்சார வினியோகம் அடியோடு பாதிக்கப்பட்டது.பூங்கா பகுதி அடியோடு சிதிலமடைந்த காரணத்தால் பூங்காவிற்குள் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்டவில்லை.இதேபோல வைகை அணையில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான மாந்தோப்பில் நன்கு காய்ந்து விரைவில் அறுவடைக்கு தயாராக இருந்த 20 டன்னுக்கும் அதிகமான மாங்காய்கள் காற்றில் உதிர்ந்து கீழே விழுந்தது.இதனால் மாந்தோப்பை ஏலம் எடுத்தவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டடுள்ளனர்.வரலாறு காணாத சூறாவளி காற்றினால் சேதமடைந்த வைகை அணை பூங்கா பகுதியையும்,குடியிருப்பு பகுதிகளிலும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து நிவாரணம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.   

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து