முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தீவிரவாத விவகாரம்: பாகிஸ்தானுக்கு வக்கலாத்து வாங்கும் சீனா

புதன்கிழமை, 28 ஜூன் 2017      உலகம்
Image Unavailable

பெய்ஜிங், தீவிரவாதத்தை ஒடுக்குவதில் பாகிஸ்தான் முன்னிலையில் விளங்குகிறது என்று அந்த நாட்டுக்கு சீனா வக்கலாத்து வாங்குகிறது.

தீவிரவாதத்தை ஒழிப்பதற்கு நட்பு நாடு என்ற ஒப்பந்தத்தின்கீழ் பாகிஸ்தானுக்கு அமெரிக்கா லட்சக்கணக்கான கோடி ரூபாய் நிதியுதவி செய்து வருகிறது. அந்த நிதியுதவியை பெற்றுக்கொள்ளும் பாகிஸ்தான் தீவிரவாதத்தை ஒழிப்பதற்கு ஒரு சிறு அளவு மட்டும் நிதியை செலவு செய்துவிட்டு இந்தியாவுக்கு எதிராக ஆயத உற்பத்தியை அதிகரிப்பதற்கும் தீவிரவாத இயக்கங்களை ஊக்குவிக்கவும் பயன்படுத்தி வருகிறது. லஷ்கர்-இ-தொய்பா, முஷாஹிதீன் ஐஎஸ்ஐஎஸ் போன்ற தீவிரவாத இயக்கங்களுக்கு தேவையான வசதிகளை செய்துகொடுத்து பயிற்சி மையங்கள் அமைக்க நிதியுதவி செய்து வருகிறது. அல்கொய்தா தீவிரவாத இயக்க தலைவனாக இருந்த பின்லேடனுக்கே இருப்பிடம் கொடுத்து தங்கவைத்தது பாகிஸ்தான். 

இந்த நிலையில் அமெரிக்கா சென்ற இந்திய பிரதமர் மோடி, அதிபர் டிரம்பை சந்தித்து பேசினார். சந்திப்புக்கு பின்னர் இருவரும் கூட்டாக அறிக்கை வெளியிட்டனர். அதில் தீவிரவாதத்தை ஒடுக்கவதில் பாகிஸ்தான் தீவிரமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். தீவிரவாத இயக்கங்களுக்கு புகழிடம் கொடுக்கக்கூடாது என்றும் பாகிஸ்தானை கேட்டுக்கொள்ளப்பட்டது. காஷ்மீர் மாநிலத்தில் இருந்துகொண்டு நாசவேலையில் ஈடுபடும் ஹிஸ்புல் முஜாஹிதீன் தீவிரவாத இயக்கத்தலைவன் ஷையது சலாவூதினை சர்வதேச பயங்கரவாதி என்றும் அந்த அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது. 
இந்தநிலையில் பாகிஸ்தானுக்கு சீனா வக்கலாத்து வாங்கியுள்ளது. தீவிரவாதத்தை ஒடுக்குவதில் பாகிஸ்தான் முன்னணியில் இருக்கிறது என்று சீனா தெரிவித்துள்ளது. தீவிரவாத்தை ஒழிப்பதில் சர்வதேச அளவில் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்பதோடு தீவிரவாதத்தை ஒழிக்கும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும். இந்த விஷயத்தில் சர்வதேச நாடுகள் பாகிஸ்தானை அங்கீகரிக்க வேண்டும் என்று சீனா வெளியுறவுத்துறை செய்திதொடர்பாளர் லூ கங் நேற்று பெய்ஜிங்கில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் தெரிவித்தார்.

இந்தியாவும் அமெரிக்காவும் உறவை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்று டிரம்ப் கூறியிருப்பது குறித்து நிருபர்கள் கேட்டதற்கு சீனாவுடன் உறவு வைத்துக்கொள்ள பல நாடுகள் விருப்பமும் ஆர்வமும் தெரிவித்துள்ள என்று கங் பதில் அளித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து