முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரதமர் மோடிக்கு சைக்கிள் பரிசளித்த நெதர்லாந்து பிரதமர் !

புதன்கிழமை, 28 ஜூன் 2017      உலகம்
Image Unavailable

ஆம்ஸ்டர்டாம், நெதர்லாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடிக்கு, அந்நாட்டு பிரதமர் மார்க் ருட்டே சைக்கிள் ஒன்றினை பரிசளித்தார்.

சுற்றுப்பயணம்

பிரதமர் மோடி தனது 2 நாள் அமெரிக்க பயணத்தை முடித்துக்கொண்டு ஐரோப்பிய நாடான நெதர்லாந்துக்கு சென்றார். நேற்று முன்தினம் அவர் அந்நாட்டின் பிரதமர் மார்க் ரட்டேயை ஆம்ஸ்டர்டாம் நகரில் சந்தித்து பேசினார். அப்போது இரு நாடுகளுக்கும் இடையே சமூக பாதுகாப்பு, நீர் மற்றும் கலாசார ஒத்துழைப்பு என 3 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாயிற்று. இதனிடையே, பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி நாடு திரும்பும் போது, அவருக்கு நெதர்லாந்து பிரதமர் அழகான சைக்கிள் ஒன்றினை பரிசாக அளித்தார்.

சைக்கிள் பரிசு

இதனையடுத்து சைக்கிளை பரிசளித்த மார்க் ரட்டேவுக்கு மோடி நன்றி தெரிவித்தார். மேலும், சைக்கிள் மற்றும் நெதர்லாந்து பிரதமருடன் பல்வேறு புகைப்படங்களை மோடி எடுத்துக் கொண்டார்.  பிரதமர் மார்க் ரட்டே அளித்த சைக்கிள் நெதர்லாந்து நாட்டில் போக்குவரத்துக்கு அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருவதாகும். நெதர்லாந்து நாட்டில் 36 சதவீதம் மக்கள் சைக்கிள் போக்குவரத்தையே விரும்புகின்றனர். வெளிநாடுகள் செல்லும் பொழுதெல்லாம் அந்நாட்டு தலைவர்களுக்கு இந்தியாவில் இருந்து ஒரு பரிசினை கொண்டு சென்று அளிப்பது வழக்கம். இந்த முறை மோடிக்கு ஆச்சர்யம் அளிக்கும் வகையில் நெதர்லந்து பிரதமர் பரிசு அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, பிரதமர் மார்க் ரட்டே தனது டுவிட்டர் பக்கத்தில், தங்கள் நாட்டில் வருகை புரிந்த பிரதமர் மோடிக்கு இந்தி மொழியில் நன்றி தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து