முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மோடி- டிரம்ப் சந்திப்பானது மிகப்பெரிய வெற்றியாகும்: அமெரிக்க நிபுணர்கள் கருத்து

புதன்கிழமை, 28 ஜூன் 2017      உலகம்
Image Unavailable

வாஷிங்டன், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் சந்தித்து பேசியது மிகப்பெரிய வெற்றியாகும் என்று அமெரிக்க நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

அதிபர் டிரம்பும் பிரதமர் மோடியும் வெள்ளைமாளிகையில் சந்தித்து பேசினர். அப்போது அவர்கள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் ராணுவம், பாதுகாப்பு, வர்த்தகம் உள்பட பல்வேறு துறைகளில் இருநாடுகளிடையே மேலும் ஒத்துழைப்பை அதிகரிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. பாகிஸ்தான் தீவிரவாதத்தை ஒழிக்க விரைந்து செயல்பட வேண்டும் என்றும் தீவிரவாதத்திற்கு எதிராக அமெரிக்காவும் இந்தியாவும் ஒருங்கிணைந்து செயல்படுவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

இரண்டு தலைவர்களின் இந்த சந்திப்பு ஒரு மிகப்பெரிய வெற்றியாகும் என்று அமெரிக்க நிபுணர்கள் தங்களுடைய கருத்தை தெரிவித்துள்ளனர். இந்தியா-அமெரிக்கா இடையே ஒத்துழைப்பு அடுத்த நிலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். மோடியின் வருகை மிகப்பெரிய வெற்றியாகும். அதிலும் இருநாடுகளும் அனைத்து துறைகளிலும் ஒத்துழைக்க முன்வந்துள்ளன. இதில் கருத்து வேறுபாடு எதுவும் இல்லை என்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன் என்று தெற்கு மற்றும் மத்திய ஆசிய நாடுகளுக்கான அமெரிக்க முன்னாள் வெளியுறவுத்துறை துணை அமைச்சர் ராபர்ட் பிளாக் தெரிவித்துள்ளார்.

அதிபர் டிரம்ப்-மோடி சந்திப்பின்போது இருநாடுகளிடையே வர்த்தக பற்றாக்குறை மற்றும் எச்1பி விசா தொடர்பான பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படலாம் என்று பல நிபுணர்கள் நினைத்தனர். அதற்கு மாறாக தீவிரவாதம் ஒழிப்பு,ராணுவம் போன்ற முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைக்கு ஒத்துழைப்பு கொடுக்கவும் வர்த்தகத்தில்   இருதரப்பினரும் நியாயமான முறையில் இருதரப்பினரும் முன்னேற்றத்தை ஏற்படுத்த முடிவு செய்திருப்பது வரவேற்கத்தக்கது என்றும் பிளாக் மேலும் கூறியுள்ளார்.
டிரம்பு- மோடி சந்திப்பானது அர்த்தமுள்ளதாக இருந்ததற்கு மோடியின் கொள்கை அணியானது அரசியல் அணியை வென்றுள்ளது என்று அமெரிக்காவின் மற்றொரு நிபுணர் ரோஸ்ஸோ தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பால் தன்னுடைய வெளியுறவுக்கொள்கையானது எனக்கு பலம் வாய்ந்தது என்பதை மோடி மீண்டும் நிரூபிக்க செய்துள்ளது என்று சதானந்த் டுமி என்ற நிபுணர் கருத்து தெரிவித்துள்ளார். உலக அளவில் குழப்பம் நிலவும் நேரத்தில் அமெரிக்காவுடன் இந்திய உறவு சரியான பாதையில் சென்றுகொண்டியிருக்கிறது என்பது டெல்லிக்கு முக்கியமானதாகும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து