முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அண்டால்யா ஓபன் டென்னிஸ்: இந்திய வீரர் ராம்குமார் ராமநாதன் சாதனை

புதன்கிழமை, 28 ஜூன் 2017      விளையாட்டு
Image Unavailable

அண்டால்யா : அண்டால்யா ஓபன் டென்னிஸ் தொடரில், டென்னிஸ் உலகத் தரவரிசையில் 8-வது இடத்தில் இருக்கும் டொமினிக் தியெம்-ஐ வீழ்த்தி இந்திய வீரர் ராம்குமார் ராமநாதன் சாதனைப் படைத்துள்ளார்.

222-வது இடம் ...

இந்திய டென்னிஸ் வீரர்களில் ஒருவர் ராம்குமார் ராமநாதன். இவர் உலகத் தரவரிசையில் 222-வது இடத்தில் உள்ளார். துருக்கியில் நடைபெற்று வரும் அண்டால்யா ஓபன் டென்னிஸ் தொடரில் ஆஸ்திரியாவின் டொமினிக் தியெம்-ஐ எதிர் கொண்டார். தியெம் உலகத் தரவரிசையில் 8-வது இடத்தில் உள்ளா்ர. சமீபத்தில் முடிவடைந்த பிரெஞ்ச் ஓபனில் அரையிறுதிக்கு முன்னேறியவர்.

அபார வெற்றி

திலைசிறந்த வீரராக தியெமிற்கு எதிராக ராம்குமார் ராமநாதன் தாக்குப்பிடிப்பாரா? என்று ரசிகர்களிடம் கேள்வி எழுந்தது. ஆனால், ராம்குமார் ராமநாதன் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ராம்குமாரின் ஆட்டத்தை தியெம் சற்றும் எதிர்பார்க்கவில்லை. தொடர்ந்து முன்னேறிய ராம்குமார் ராமநாதன் 6-3, 6-2 என தியெம்-ஐ வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். இந்த வெற்றியை பெற ராம்குமாருக்கு ஒரு மணி நேரம் கூட தேவைப்படவில்லை. தியெம்மிற்கு எதிராக 10 ஏசஸ் சர்வீஸ் செய்து ராம்குமார் ராமநாதன் அசத்தினார். தியெம்மால் நான்கு ஏசஸ் சர்வீஸ்தான் செய்ய முடிந்தது.  அடுத்ததாக நடைபெற உள்ள காலிறுதி போட்டியில் ராமநாதன் சிப்ரஸின் மார்கோஸ் பாக்தாத்திஸை எதிர்கொள்கிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து