முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொடைக்கானல் ரோட்டரி சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு

ஞாயிற்றுக்கிழமை, 2 ஜூலை 2017      திண்டுக்கல்
Image Unavailable

கொடைக்கானல்- -கொடைக்கானல் ரோட்டரி சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு நடந்தது.
 கொடைக்கானல் ரோட்டரி சங்கத்தின் 2017-18ம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் தேர்வு நடந்தது.
 இந்த விழாவிற்கு சேலம் ரோட்டரி சங்க முன்னாள் ஆளுநர் வேலாயுத ரவீந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். ரோட்டரி முன்னாள் ஆளுநர் சாம்பாபு தலைமை தாங்கினார். துணை ஆளுநர்கள் நஜிமுதீன், வட்டார ஒருங்கிணைப்பாளர் சுகுமார், ஆகியோர் முன்னிலை வகித்தனர். கடந்த ஆண்டின் தலைவர் ராமன் ராஜ்குமார், செயலாளர் ஜஸ்வாந்த் ஆகியோர் கடந்த ஆண்டில் சிறப்பாக பணி செய்த ரோட்டரி உறுப்பினர்களுக்கும், மற்றும் பலருக்கு நினைவு பரிசுகளை வழங்கி சிறப்பித்தனர்.
 இந்த ஆண்டின் புதிய தலைவராக கொடைக்கானல் பீட்டர்ஸ் பள்ளியின் துணை தாளாளர் ரோகன் சாம்பாபு தேர்ந்தெடுக்கப்பட்டார். செயலாளராக ராஜ்குமார், பொருளாளராக ராஜேஸ், சங்க பயிற்றுநராக முன்னாள் ஆளுநர் சாம்பாபு, உள்ளிட்ட 32 உறுப்பினர்கள் தேர்வு பெற்று பொறுப்பேற்றுக் கொண்டனர். புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்ற உடன் 6 திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக கொடைக்கானல் அரசு மருத்துவமனை வளாகத்தில் மரக் கன்றுகள் நடும் விழா நடந்தது. இந்த விழாவிற்கு கொடைக்கானல் வனச் சரக மாவட்ட வன அலுவலர் டாக்டர் முருகன் தலைமை தாங்கி மரக் கன்றுகளை நட்டார். பின்னர் கொடைக்கானல் செயின்ட் ஜான் பள்ளி தங்கும் விடுதி மாணவிகளுக்கு உணவு பொருட்கள், நாயுடு புரம் மற்றும் செயின்ட் ஜான் பள்ளிகளுக்கு புத்தகங்கள் வழங்கப்பட்டது. கொடைக்கானலை சேர்ந்த ஒருவருக்கு மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டது. இவை உள்ளிட்ட 6 திட்டங்கள் முதல் நாளில் நிறைவேற்றப்பட்டது. புதிதாக பொறுப்பேற்ற தலைவர் ரோகன் சாம்பாபு உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு முன்னாள் ஆளுநர்கள் வேலாயுதம் ரவீந்திரன், சாம்பாபு ஆகியோர் பதவி பிரமானம் செய்து வைத்தனர்.  இந்த விழாவில் கொடைக்கானல் மாவட்ட வன அலுவலர் டாக்டர் முருகன், முன்னாள் நாகர்மன்றத் தலைவர் முகமது இப்ராகிம், கோவிந்தன், உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.புதிய செயலாளர் ராஜ்குமார் நன்றி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து