முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதுநிலை பட்டதாரி ஆசிரியர் எழுத்து தேர்வு ராமநாதபுரத்தில் 3 ஆயிரத்து 339 பேர் எழுதினர்

ஞாயிற்றுக்கிழமை, 2 ஜூலை 2017      ராமநாதபுரம்
Image Unavailable

ராமநாதபுரம்,- ராமநாதபுரம் மாவட்டத்தில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் எழுத்து தேர்வினை 3 ஆயிரத்து 339 பேர் எழுதினர்.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெறும் தேர்வு மையமான ராமநாதபுரம் செய்யது அம்மாள் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட கலெக்டர் முனைவர்.ச.நடராஜன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது:- ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் முதுநிலை பட்டதாரி  ஆசிரியர் நியமனத்தேர்வினை ராமநாதபுரம் வருவாய் மாவட்ட அளவில் 10 மையங்களிலும் 3ஆயிரத்து 615 தேர்வர்கள் விண்ணப்பித்திருந்தனர்.  அதில் இன்று 3ஆயிரத்து 339 தேர்வர்கள் தேர்வெழுதியுள்ளனர்.

அனைத்து தேர்வு மையங்களிலும் காவலர்களின் துணையுடன் தேர்வர்களை சோதனை அலுவலர்களால் சோதனை செய்யப்பட்ட பின்னரே தேர்வெழுத அனுமதிக்கப்படுவர். ஒவ்வொரு மையத்திற்கும் முதன்மைக் கண்காணிப்பாளர், துறை அலுவலர், கூடுதல் துறை அலுவலர், நிற்கும்படை உறுப்பினர், அறைக் கண்காணிப்பாளர் ஆகியோர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

9 கண்பார்வையற்ற தேர்வர்களுக்கு 9 சொல்வதை எழுதுபவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.ஆர்வமுடன் தேர்வு எழுத வந்த  61 மாற்றுத்திறனாளி தேர்வர்களுக்கு தேர்வெழுத வசதியாக அறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  தேர்வர்கள் எவரேனும் முறைகேடான செயலில் ஈடுபட்டால் அவர்கள் இனிவரும் காலங்களில் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் எந்தவொரு தேர்விலும் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

மேலும் தேர்வறையில் தேர்வு எழுதுபவர்களுக்கு அடிப்படை வசதிகளான குடிநீர் வசதி, தடையில்லா மின்சாரவசதி, பேருந்துவசதி உள்ளிட்ட வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இத்தேர்வானது காலை 10 மணிமுதல் துவங்கி  1 மணிவரை நடைபெறுகிறது இவ்வாறு கூறினார். ஆய்வின் போது பரமக்குடி மாவட்ட கல்வி அலுவலர் தெ.பாலசுப்ரமணியன் உள்pட்ட  அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து