முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈரோடு மாவட்டத்தில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் போட்டித்தேர்வு 19 தேர்வு மையங்களில் 7,404 தேர்வர்கள் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் போட்டித்தேர்வு எழுதுகிறார்கள் வருவாய் அலுவலர் ச.கவிதா தகவல்

ஞாயிற்றுக்கிழமை, 2 ஜூலை 2017      ஈரோடு
Image Unavailable

ஈரோடு மாவட்ட அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில்  இன்று (02.07.2017) நடைபெறும் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் போட்டித்தேர்வு  மையத்தினை மாவட்ட வருவாய் அலுவலர் ச.கவிதா  நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.

விரிவான ஏற்பாடுகள்

ஈரோடு மாவட்டத்தில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் போட்டித்தேர்வில் 7,404 தேர்வர்கள் கலந்து  கொள்ள விண்ணப்பித்திருந்தனர். இதில் 72 மாற்றுத்திறனாளி தேர்வர்கள், 6 கண்பார்வையற்ற தேர்வர்கள் தேர்வு எழுதுகிறார்கள். இந்த 6 கண்பார்வையற்ற தேர்வர்கள் தேர்வு எழுத சொல்வதை எழுதுபவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தேர்வர்கள் சிறப்பாக தேர்வு எழுதும்பொருட்டு விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

ஆய்வு

இதற்காக 19 முதன்மைக் கண்காணிப்பாளர்கள், கூடுதல் முதன்மைக் கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள், கூடுதல் துறை அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 420 அறை கண்காணிப்பாளர்களும், 76 சோதனை அலுவலர்களும் 38 காவலர்களும் தேர்விற்கு வருகை தரும் தேர்வாளர்கள் காவல் துறை உதவியுடன் சோதனை செய்யப்பட்டு தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வினா தாட்கள் 4 வழித்தடங்களில் தேர்வு மையங்களுக்கு ஆயுதம் தாங்கிய காவலர் பாதுகாப்புடன் எடுத்துச் சென்று வழங்கப்பட்டுள்ளது.  தேர்வு மையங்களில் குடிநீர் வசதி, கழிப்பிட வசதி மின்சார வசதி உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளது. என மாவட்ட வருவாய் அலுவலர் ச.கவிதா  தெரிவித்தார்.
இந்த ஆய்வின்போது முதன்மைக்கல்வி அலுவலர் ஆர்.பாலமுரளி உடனிருந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து