கோபியில் கள்ளநோட்டை மாற்ற முயன்ற 2 பேர் கைது. இதில் தொடர்புடைய சிலருக்கு வலைவீச்சு

ஞாயிற்றுக்கிழமை, 2 ஜூலை 2017      ஈரோடு
Forgery 100 rupees notes

கோபி பச்சைமலை அடிவாரத்தில்  கடை வைத்து நடத்தி வருபவர் கைலாசம். இவரது கடைக்கு நேற்று மாலை ஒருவர் 100 ரூபாய் நோட்டைக் கொடுத்து பிஸ்கட் போன்ற பொருளை வாங்கிக் கொண்டு பாக்கி பணம் ரூ.80 வாங்கிச் சென்றார்.

போலீஸ் விசாரணை

சிறிது நேரத்தில் கடைக்காரர் அந்த 100 ரூபாய் நோட்டை உற்று பார்த்த போது அது கள்ள நோட்டு என தெரிந்தது. உடனடியாக அந்த மர்ம நபரையும், அவருடன் வந்த பெண் ஒருவரையும் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் உதவியுடன் பிடித்து  கோபி போலீசில்  ஒப்படைத்தனர். போலீஸ் விசாரணையில் சித்தோட்டைச் சேர்ந்த டேனியல்(47) என்பதும், கவுந்தப்பாடி, இரட்டை வாய்க்கால் பகுதியைச் சேர்ந்த செல்வி(45) என்பதும் தெரிய வந்தது. செல்வியின் கணவர் பழனிச்சாமி ஏற்கனவே இறந்து விட்டார். இவர்கள் இருவரும் திருமண அமைப்பாளர்கள் என்று தங்களைக் கூறிக் கொண்டு பையன், பெண் ஜாதகங்களை வாங்கி வைத்துக் கொண்டு பல்வேறு இடங்களில் சுற்றித் திரிந்து கள்ள நோட்டுக்களை மாற்றி வந்ததும் தெரிய வந்தது. போலீசார் இவர்களிடமிருந்து கலர் ஜெராக்ஸ் 100 ரூபாய் கள்ள நோட்டுகள் 20 பறிமுதல் செய்தனர். கோபி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.
கோபி டி.எஸ்.பி. செல்வம் தலைமையில் தனிப்படை அமைத்து இந்த கள்ள நோட்டுக்களை யாரிடம் பெற்று வந்தனர். யார் இதற்கு மூளையாக செயல்பட்டது  என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tata Harrier 2019 SUV Full Review | In Depth Review - Pros & Cons | Thinaboomi

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து