முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஊட்டியில் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க முதன் முதலாக சாகச விளையாட்டு அறிமுகம்

ஞாயிற்றுக்கிழமை, 2 ஜூலை 2017      நீலகிரி
Image Unavailable

ஊட்டியில் சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்க முதன் முதலாக சாகச விளையாட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

பல்லாயிரக்கணக்கானோர்

உலக சுற்றுலா நகரமான ஊட்டிக்கு நாள்தோறும் பல்லாயிரக் கணக்கானோர் வந்து செல்கின்றனர். இதில் வார இறுதி மற்றும் தொடர்விடுமுறை நாட்களில் இதன் எண்ணிக்கை பலமடங்கு அதிகரிக்கும். அதிலும் கோடை சீசன் காலங்களான ஏப்ரல், மே மாதங்களில் மட்டும் லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வர். ஊட்டிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் பார்வையிட்டு மகிழ்விக்க தோட்டக்கலைத்துறை சார்பில் அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா, பூங்கா, தேயிலை பூங்கா போன்ற பூங்காக்களும், சுற்றுலா வளர்ச்சிக்கழகம் சார்பில் படகு இல்லம், தொட்டபெட்டா சிகரம் போன்ற இடங்களும் உள்ளன. நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் பூங்காக்களில் மலர்வகைகளையும், தேயிலை தோட்டங்களையும், மலைமுகடுகளையும் பார்த்து ரசித்து வந்தனர்.

சாகச விளையாட்டு

சமீபகாலமாக சுற்றுலா பல மாற்றங்களை கண்டு வருகிறது. உதாரணமாக தேயிலை தோட்டங்கள், தேயிலை தொழிற்சாலைகள் சுற்றுலாப் பயணிகளை கவரும் வண்ணம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதில் தேயிலையை எவ்வாறு உற்பத்தி செய்வது என்பது குறித்த தகவல்களும், தேயிலை தயாரிக்கும் முறையையும் சுற்றுலாப் பயணிகளுக்கு காண்பிக்கின்றனர்.
இந்த நிலையில் தற்போது ஊட்டியிலிருந்து தொட்டபெட்டா செல்லும் சாலையில் தனியாருக்குச் சொந்தமான இடத்தில் தி டீ மியூசியம் அருகில் தமிழக அரசின் சுற்றுலாத்துறை அனுமதியுடன் தமிழகத்திலேயே முதன் முதலாக சாகச விளையாட்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.  இதில் 120 அடி உயரம் கொண்ட கோபுரத்தை அடைந்திட 300 அடி நீளம் கொண்ட இரும்பு கம்பிகளில் தொங்கியவாறே ஒருபுறம் இருந்து மறுபுறம் வரை செல்லும் திரில் பயணத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் தொங்கியவாறே ஊட்டி நகரின் அழகை கண்டு ரசிக்கலாம். அதோடு தொங்கு பாலமும் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மீது அந்தரத்தில் கால் ஊன்றி நடந்து செல்வது ஒரு சாகசப் பயணம். அதேபோல் 60 அடி உயரம் கொண்ட கயிறினால் ஆன சுவற்றில் ஏறுவது என 7 வகையான விளையாட்டுகள் இங்கு பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ளது. தற்போது தி டீ மியூசியத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் தேயிலை உற்பத்தியை கண்டு ரசிப்பதோடு இந்த சாகச விளையாட்டிலும் பங்குபெறுவதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

மனதில் பயத்தை போக்கும்

இது குறித்து இந்த சாகச விளையாட்டு அமைப்பின் மேலாளர் வரதராஜ் கூறுகையில், தென்னிந்தியாவிலேயே மிக உயரமான டவர் இங்குதான் உள்ளது. சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் இந்த சாகச விளையாட்டை ஆரம்பித்துள்ளோம். இதன் மூலம் செல்ப்கான்பிடன்ட் டெவலப்பண்ணுவதற்கும், மனதில் பயத்தை போக்குவதற்கும், மாணவர்களுக்கும் பயனுள்ளதாகவும் இருக்கும். இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் இந்த விளையாட்டு மிகவும் அமேசிங்காக உள்ளதாக தெரிவிக்கின்றனர் என்றார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து