முதுகலை பட்டதாரி ஆசிரியர் தகுதித்தேர்வு நீலகிரியில் 1351 பேர் எழுதினர்

ஞாயிற்றுக்கிழமை, 2 ஜூலை 2017      நீலகிரி
2ooty-1

நீலகிரி மாவட்டத்தில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் தகுதித்தேர்வினை 1351 பேர் எழுதினர்.

ஆய்வு

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் பிரீக்ஸ் பள்ளி, சாந்தி விஜய் பள்ளி, புனித சூசையப்பர் பள்ளி, பெத்தலகேம் பள்ளி ஆகிய 4 இடங்களிலும், குன்னூரில் சென்ட் மேரீஸ் பள்ளி என மொத்தம் 5 இடங்களில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் தகுதி தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வினை எழுத  1522 பேர் அனுமதிக்கப்பட்டிருந்தனர். ஆனால் 1351 பேர் மட்டுமே தேர்வெழுத வருகை தந்திருந்தனர். மீதமுள்ள 171 பேர் தேர்வெழுத வரவில்லை.
இந்த நிலையில் தேர்வு நடைபெற்ற இடங்களை மாவட்ட கலெக்டர்(பொ) தெ.பாஸ்கரபாண்டியன் நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது கோட்டாட்சியர் கே.கார்த்திகேயன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பிச்சையப்பன் ஆகியோர் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து