காஞ்சிரபுரம் மாவட்டத்தில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு நடைபெற்ற மையங்கள் : கலெக்டர் பொன்னையா ஆய்வு

ஞாயிற்றுக்கிழமை, 2 ஜூலை 2017      காஞ்சிபுரம்
Kanchipuram 2017 06 02

தமிழகத்தில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 1663 முதுகலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் (கிரேடு -1) பணியிடங்களை நேரடி நியமன முறையில் நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வு அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர்,(தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவில், விலங்கியல், வரலாறு, புவியியல், பொருளியல், வணிகவியல், நுண் உயிரியல், உயிர் வேதியியல் மற்றும் உடற்கல்வி இயக்குநர் (கிரேடு -1) பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 2108 ஆண் தேர்வர்கள், 4017 பெண் தேர்வர்கள் ஆக மொத்தம் 6125 நபர்கள் பங்கேற்கின்றனர். இதில் காஞ்சிபுரம் மாவட்ட அளவில் 19 பார்வை குறைபாடு உடைய தேர்வர்கள் உட்பட 76 மாற்றுத் திறனாளி தேர்வர்கள் பங்கேற்கின்றனர். அவர்களின் வசதிக்காக, சொல்வதை எழுதுவதற்காக 24 ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதற்காக மாவட்டத்தில் 16 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

ஆய்வு

மேலும் வினாத்தாள் கட்டுக்காப்பு மையமாக செயல்படும் பெரிய காஞ்சிபுரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் சிசிடிவி கேமராக்கள் மற்றும் ஆயுதம் தாங்கிய காவலர் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதுகலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர்(கிரேடு-1) பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்விற்காக மாவட்ட கலெகடர்ப.பொன்னையா, ஒருங்கிணைப்பு குழு தலைவராகவும், பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குநர் (பணியாளர் தொகுதி) டாக்டர் இரா.பாஸ்கரசேதுபதி மாவட்ட தேர்வு மைய மேற்பார்வை அலுவலராகவும், காஞ்சிபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், ரெ.திருவளர்செல்வி மாவட்ட தேர்வு ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர் செயலராகவும், ஒவ்வொரு தேர்வு மையத்திற்கும் முதன்மைக் கண்காணிப்பாளர், கூடுதல் முதன்மைக் கண்காணிப்பாளர், துறை அலுவலர், கூடுதல் துறை அலுவலர் போன்ற தேர்வு பணி அலுவலர்கள் 64 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்


தேர்வர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப அறை கண்காணிப்பாளர்களாக 311 ஆசிரியர்கள், மாவட்ட கல்வி அலுவலர்களால் நியமனம் செய்யப்படவுள்ளனர். மேலும், இந்த ஆசிரியர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வில் முறைகேடுகள் நடைபெறமாமல் இருக்க நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் 67 பேர், காவல் துறையினர் 48 பேர் என 115 பேர் முழு ஆய்வுப்பணியில் ஈடுபடவுள்ளனர்.

இந்த வார ராசிபலன் - 17.06.2018 முதல் 23.06.2018 வரை | Weekly Tamil Horoscope from 17.06.2018 to 23.06.2018

Kashmiri Capscicum Chicken Recipe

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து