திருவள்ளுர் மாவட்டத்தில் முதுகலை ஆசிரியர் நேரடி நியமன போட்டி எழுத்துத்தேர்வு மையங்களை மாவட்ட கலெக்டர்(பொ) கே.முத்து நேரில் ஆய்வு

ஞாயிற்றுக்கிழமை, 2 ஜூலை 2017      திருவள்ளூர்
Thiruvallur 2017 06 02

திருவள்ளுர் மாவட்டத்தில் முதுகலை ஆசிரியர் நேரடி நியமன போட்டி எழுத்துத்தேர்வு மையங்களை மாவட்ட கலெக்டர்(பொ)கே.முத்து நேரில் ஆய்வு செய்தார்.மாவட்ட கலெக்டர்(பொ) ஆர்.எம்.ஜெயின் வித்யா மேல் நிலைபள்ளி(திருவள்ளுர்), ஸ்ரீ நிகேத்தன் மேல்நிலைபள்ளி (திருவள்ளுர்) மற்றும் கே..நடேச செட்டியார் அரசினர் மேல் நிலைபள்ளி (மணவாள நகர்) ஆகிய பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டார்.

60 நபர்கள்

இது குறித்து மாவட்ட கலெக்டர்(பொ)றியதாவது:திருவள்ளுர் மாவட்டத்தில் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு முதுகலை ஆசிரியர் நேரடி நியமன போட்டி எழுத்துத் தேர்வு நடைபெறுகிறது இத்தேர்வுக்காக மாவட்டத்தில் 15 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இத்தேர்வினை 4,815 தேர்வர்கள் தேர்வு எழுதவுள்ளனர் ஒவ்வொரு தேர்வுமையத்திற்கும் தேர்வுப் பணியில் ஈடுபட முதன்மைக் கண்காணிப்பாளர், கூடுதல் முதன்மைக் கண்காணிப்பாளர், துறை அலுவலர், கூடுதல் துறை அலுவலர் போன்ற தேர்வுப் பணி அலுவலர்கள் 60 நபர்களும், தேர்வர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப அறை கண்காணிப்பாளர் 251 ஆசிரியர்கள் குலுக்கல் முறையில் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இத்தேர்வில் பார்வை குறைபாடுடைய தேர்வர்கள் 21 பேரும், மாற்றுத் திறனாளி தேர்வர்கள் 80 பேரும் தேர்வு எழுதுகின்றனர். பார்வை குறைபாடுடைய தேர்வர்கள், மாற்றுத்திறனாளி தேர்வர்களுக்காக சொல்வதை எழுதுவதற்கு மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் பயிற்சி அளிக்கப்பட்ட 24 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்வுகளில் முறைகேடுகள் நிகழாமல் இருக்க தேசிய மாணவர் படை, நாட்டுநலப்பணி திட்ட அலுவலர்கள், உடற்கல்வி இயக்குநர், உடற்;கல்வி ஆசிரியர்கள் 54 பேரும், காவல் துறையினர் 54 பேரும் ஆக மொத்தம் 108 முழு பரிசோதனை பணிகளில்; ஈடுபட்டுள்ளனர். இவ்வாறு மாவட்ட கலெக்டர்(பொ) தெரிவித்தார்.

முதுகலை ஆசிரியர் நேரடி நியமன போட்டி எழுத்துத் தேர்வு எழுத் 1816 ஆண்களும், 2999 பெண்களும் என 4815 நபர்கள் விண்ணப்பித்துள்ளனர். 1681 ஆண்களும், 2675 பெண்களும் என மொத்தம் 4356 நபர்கள் தேர்வு எழுதினார்கள். 135 ஆண்களும், 324 பெண்களும் என 459 நபர்கள் தேர்வு எழுத வரவில்லை.இவ்வாய்வின்போது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் த.இராஜேந்திரன், மாவட்ட கல்வி அலுவலர்(திருவள்ளுர்) கருணாகரன், முதன்மைக் கண்காணிப்பாளர்கள் பண்டரிபாய்,ரவிக்குமார், பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து