பொன்னேரி வேலம்மாள் தொழில் நுட்ப கல்லூரியின் ஆறாவது பட்டமளிப்பு விழா

ஞாயிற்றுக்கிழமை, 2 ஜூலை 2017      சென்னை
Poonneri 2017 06 02

பொன்னேரி அடுத்த பஞ்செட்டியில் உள்ள வேலம்மாள் தொழில் நுட்ப கல்லூரியின் ஆறாவது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது.கல்லூரி முதல்வர் சந்திரசேகர் அனைவரையும் வரவேற்று கல்லூரியின் ஆண்டறிக்கை வாசித்தார்.வேலம்மாள் கல்விக்குழும தலைவர் எம்.வி.முத்துராமலிங்கம் சிறப்புரையாற்றினார்.

பட்டங்கள்

சி.வி.ஆர்.டி..இயக்குநர் டாக்டர் சிவகுமார் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு அண்ணா பல்கலைக்கழக தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற 481 மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.மேலும் பல்கலைக் கழக தரவரிசை பட்டியலில் இடம்பெற்ற 12 மாணவர்களுக்கு பட்டங்களுடன் தங்க காசுகளையும் ரொக்கப்பரிசுகளையும் வழங்கினார்.அவர் தன்னுடைய சிறப்புரையில் பட்டம் பெற்ற அனைத்து மாணவர்களும் தற்கால கல்வியில் நாட்டம் செலுத்தி அதனை நன்கு கற்றுணர்ந்து தங்களுடைய நிலையினை உயர்த்தி,நாட்டு நலனையும் காக்கவேண்டும் என்றார்.

காக்னிசண்ட் டெக்னாலாஜி துணைத்தலைவர் முருகன் சுப்ரமணிய பிள்ளை சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு மாணவர்கள் பணிபுரிந்துக்கொண்டே தங்கள் திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும் மேலும் தொழில்நுட்ப உலகத்தோடு ஒன்றுணைந்து செயல் புரிய வேண்டும் என்றார்இவ்விழாவில் வேலம்மாள் கல்வி அறக்கட்டளையின் முதன்மை செயல் அதிகாரி எம்.வி.எம்.வேல்முருகன்,தாளாளர் எம்.வி.எம்.வேல்மோகன்,இயக்குனர் எம்.வி.எம்.சசிகுமார் மற்றும் ஆலோசகர்கள் பேராசிரியர் கே.ரசாக்,எம்.வாசு,கல்லூரியின் துணை முதல்வர் முனைவர் எஸ்.சௌந்தரராஜன் மற்றும் அனைத்து துறை தலைவர்களும் கலந்துக்கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து