சங்கரன்கோவிலில் ரத்ததான முகாம்

ஞாயிற்றுக்கிழமை, 2 ஜூலை 2017      திருநெல்வேலி
snkl blood camp 2017 07 02

சங்கரன்கோவிலில் தேசிய  மருத்துவ தினத்தை முன்னிட்டு மருத்துவர்கள் இரத்த தானம் செய்தனர்.

 ரத்ததான முகாம்

சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் இந்திய செஞ்சிலுவை சங்கமும், இந்திய மருத்துவர்கள் சங்க கிளையும் இணைந்து நடத்திய இரத்த தான முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சங்கரன்கோவில் செஞ்சிலுவை சங்க கிளை தலைவர் அரிகரசுப்பிரமணியன் தலைமை வகித்தார். செயலாளர் ராமச்சந்திரன் முன்னிலை வகித்தார். இரத்த தான முகாமை டிஎஸ்பி இராஜேந்திரன் துவக்கி வைத்தார். இந்த நிகழ்வில் மருத்துவர்கள் சுப்பாராஜ், செந்தில்சேகர், கிருஷ்ணவேணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் செஞ்சிலுவை சங்க பொருளாளர் சண்முகம் நன்றி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து