தி.மலையை புனித நகரமாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும் :தி.மலையில் ஓங்கார ஆசிரமம் சார்பில் நடந்த துறவிகள் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம்

ஞாயிற்றுக்கிழமை, 2 ஜூலை 2017      திருவண்ணாமலை

திருவண்ணாமலை ஒரு தெய்வீக நகரமாக திகழ்வதால் அதை புனித நகரமாக மத்திய அரசு அறிவிக்க வேண்டுமென திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் ஓங்கார ஆசிரமம் சார்பில் நடந்த துறவிகள் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

புதுவை ஓங்கார ஆசிரமம் சார்பில் உலக பேரமைதிக்காக 27ம் ஆண்டையட்டி மகாகிரிவல பூஜை மற்றும் மகேஸ்வர பூஜை 2 நாட்கள் திருவண்ணாலையில் நடைபெற்றது. இதையட்டி சனிக்கிழமை அன்று மாலை 4 மணியளவில் திருவண்ணாமலை கிரிவலப் பாதையிலுள்ள அஷ்டலிங்கங்களுக்கும் மகாஅபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இரவு 8 மணியளவில் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் அண்ணாமலையார் உணாமலையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது அதனைத் தொடர்ந்து கோவிலில் உள்ள மகிழ மரத்தின் அருகிலிருந்து சுவாமி ஓங்காரனந்தா தலைமையில் மகாகிரிவலம் தொடங்கியது. அதனை ஸ்ரீ வல்லளார் அருள்மணி அடிகள் தொடங்கிவைத்தார்.

பூஜை


இந்த மகா கிரிவலம் நேற்று விடியற்காலை நிறைவு பெற்றது 2வது நாளான நேற்று காலை 10 மணியளவில் திருவண்ணாமலை கிரிவலப் பாதையிலுள்ள (நேர்அண்ணாமலை கோவில் அருகில்) ஸ்ரீ ராகவேந்திரா சுவாமி பிருந்தாவனத்திலிருந்து நிருதிலிங்கம் வரை உலக நன்மைக்காக, பேரமைதிக்காகவும் சாதுக்கள் சன்னியாசிகள் சிவபஞ்சாட்சர ஜெபத்துடன் ஊர்வலம் சென்றனர். அதனைத் தொடர்ந்து 12 மணியளவில் ஸ்ரீ ராகவேந்திரா சுவாமி பிருந்தாவனத்தில் துறவிகள் ஆலோசனை கூட்டம் ஓங்கார ஆசிரம அதிபர் கோட்டீஸ்வரானந்தா சுவாமிகள் தலைமையில் மகேஸ்வர பூஜை நடைபெற்றது.

இதில் வேலூர் சச்சிதானந்தா சுவாமிஜி தி.மலை மாவட்ட தமிழ்ச்சங்க தலைவர் பா.ந்திராஜன் அறங்காவலர்கள் பி.அருண்பிரசாத், பி.எம்.ராஜசேகர் கே.எஸ்.கருணாகரன் மற்றும் எல்லப்பசுவாமிகள் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து மதியம் 1 மணியளவில் சன்னியாசிகளுக்கு மகேஸ்வர பூஜை நடைபெற்றது. இந்த பூஜையின்போது 350க்கும் மேற்பட்ட சன்னியாசிகளுக்கு ஜோல்னா பை, எவர்சில்வர் தட்டு, தம்ளர், பிரட், மருந்து பொருட்கள் மற்றும் வஸ்திரதானம் வழங்கப்பட்டன

திருவண்ணாமலையில் வாழும் துறவிகளுக்கென்று சமாதி அமைக்க (அடக்கம் செய்ய) தனி மயானத்துக்கான இடத்தினை மாநில அரசு ஒதுக்கித் தர வேண்டும் தெய்வீக நகரமான வாரணாசிக்கு சென்னையிலிருந்து செல்ல நேரடி விமான சேவை மத்திய அரசு ஏற்படுத்தி தர வேண்டும் திருவண்ணாமலை ஒரு தெய்வீக நகரமாக விளங்குவதால் இதனை புனித நகரமாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்றும் துறவிகள் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முடிவில் சட்ட ஆலோசகர் பி.நீதிக்குமார் நன்றி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து