முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வேலூர் மாவட்டத்தில் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் நடைப்பெறும் முதுகலை ஆசிரியர்களுக்கான எழுத்துத்தேர்வு மையம் : கலெக்டர் சி.அ.ராமன் ஆய்வு

ஞாயிற்றுக்கிழமை, 2 ஜூலை 2017      வேலூர்

வேலூர் ஈ.வெ.ரா.நாகம்மை அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் நடைப்பெறும் முதுகலை ஆசிரியர்களுக்கான எழுத்துத்தேர்வு நடைபெறுவதை மாவட்ட கலெக்டர் சி..ராமன். நேரடியாக ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது.

 வேலூர் மாவட்டத்தில் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் நடைப்பெறும் முதுகலை ஆசிரியர்களுக்கான எழுத்துத்தேர்வு 26 தேர்வு மையங்களில் நடைப்பெறுகிறது. இத்தேர்வில் 9,763 தேர்வர்கள் தேர்வு எழுதுகின்றனர். இதில் 148 மாற்றுத்திறனாளிகள், 38 கண் பார்வையற்றவர்கள் தேர்வு எழுதுகின்றனர். தற்போது 9086 தேர்வர்கள் இத்தேர்வில் கலந்துக்கொண்டுள்ளனர். 677 தேர்வர்கள் இத்தேர்வில் கலந்துக்கொள்ளவில்லை. மேற்படி தேர்வுப்பணியில் காவல்துறை, கல்வித்துறை, வருவாய்த்துறை சார்ந்த அலுவலர்கள் கண்காணிப்பு பணியிலும். 700 ஆசிரியர்கள் தேர்வுப்பணியிலும் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் தேர்வை கண்காணிக்க 5 பறக்கும் படைகள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தேர்வு மையங்களில் தேர்வர்களுக்கு இருக்கை வசதி குடிநீர் வசதி, தடையில்லா மின்சாரம் மற்றும் போக்குவரத்து வசதிகள் செய்யப்பட்டுள்ளது என்று மாவட்ட கலெக்டர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் மார்ஸ், வேலூர் வட்டாட்சியர் பழனி கலந்துக்கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து