முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விலைவாசிக்கு ஏற்ப தொழிலாளர்களுக்கு மாத சம்பளமாக ரூ.18 ஆயிரம் வழங்க வேண்டும்: என்.ஆர்.டிரேட் யூனியன் காங்கிரஸ் மாநாட்டில் தீர்மானம்

ஞாயிற்றுக்கிழமை, 2 ஜூலை 2017      புதுச்சேரி

அகில இந்திய என்ஆர் காங்கிரஸ் கட்சியின் தொழிற்சங்க மாநாடு நேற்று புதுச்சேரி கம்பன் கலையரங்கத்தில் நடைபெற்றது. மாநாட்டிற்கு மாநில தலைவர் ராஜசேகர் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் தேவநாதன், செய்தி தொடர்பாளர் கந்தவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில அமைப்பு செயலாளர் சிவகுமார், ஆட்டோ சங்க மாநில பொதுச் செயலாளர் அன்பழகன் ஆகியோர் வரவேற்றனர். அகில இந்திய என்ஆர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பாலன் வாழ்த்தி பேசினார். ஜெயபால் எம்எல்ஏ நோக்கவுரை ஆற்றினார். மாநாட்டை குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்து நலிந்த தொழிலாளர்களுக்கு ரூ.8 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை முன்னாள் முதல்வரும், அகில இந்திய என்ஆர் காங்கிரஸ் கட்சித் தலைவருமான ரங்கசாமி வழங்கினார். முன்னதாக மாநாட்டில் சுதந்திர போராட்ட வீரரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சர் பன்னிர்செல்வத்தின் தந்தையுமான குருசாமி மறைவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. மாநாட்டில் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. மாநாட்டையொட்டி மோட்டார் சைக்கிள் பேரணியும் புதுச்சேரி நகர் முழுவதும் நடைபெற்றது. மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

 தீர்மானங்கள்

புதிய தொழிற்சாலைகள் கொண்டு வர புதிய தொழில் கொள்கைகளை புதுவை அரசு வெளியிட வேண்டும். ரோடியர், சுதேசி, பாரதி பஞ்சாலைகளுக்கு நிதி ஒதுக்கி புனரமைத்து முழுமையாக இயக்கி வேலையில்லா இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும். ஆட்டோ தொழிலாளர்களுக்கு நலவாரியம் அமைக்க வேண்டும். அரசு மற்றும் அரசு சார்பு நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு கடந்த 11ஃ2 வருடங்களாக அளிக்கப்படாத சம்பள பாக்கியை வழங்க வேண்டும். தொழில் நிறுவனங்களை மிரட்டி மருத்துவ சிகிச்சையின் மூலம் பல கோடி ரூபாய் சுருட்டிய தொழிலாளர் துறை மருத்துவர் உதயகுமார் மற்றும் அதிகாரிகள்மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு மற்றும் அரசு சார்பு நிறுவனங்களில் பணி புரியும் ஊழியர்களுக்கு 7-வது சம்பள குழுவின் பரிந்துரைகளை உடனடியாக நிறைடீவற்ற வேண்டும். புதுச்சேரியில் உள்ள தொழிற்பேட்டைகளில் சாலை வசதி, மின்வசதி இல்லாததால் உரிய நேரத்தில் தொழிலாளர்கள் பணிக்கு வர முடியவில்லை. பெண் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. எனவே தொழிற்பேட்டைகளில் சாலை வசதி, மின்வசதி, குடிநீர் வசதிகளை செய்து தர வேண்டும். விலைவாசிக்கு ஏற்ப தொழிலாளர்களுக்கு மாத சம்பளமாக ரூ.18 ஆயிரம் வழங்க வேண்டும்.உலகெங்கும் கொண்டாடப்படும் தொழிலாளர்களின் தியாகத்தை போற்றிடும் வகையிலும், தென்கிழக்கு ஆசியாவிலேயே முதன் முதலாக 8 மணிநேர வேலை உரிமைக்காக போராடி உயிர் நீத்த பஞ்சாலைத் தொழிலாளர்களின் வரலாற்றை நினைவு கூறும் வகையில் புதுச்சேரி அரசு கடற்கரை சாலையில் தொழிலாளர் சிலை அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. முடிவில் மாநில பொருளாளர் தங்கவேலு நன்றி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து