முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருச்சி மாவட்டத்தில் முதுகலை ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் நிலை-1 பணியிடங்களுக்கான தேர்வு மையங்கள் : கலெக்டர் கு.ராசாமணி நேரில் ஆய்வு

ஞாயிற்றுக்கிழமை, 2 ஜூலை 2017      திருச்சி
Image Unavailable

 

திருச்சி மாவட்டத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் முதுகலை ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் நிலை-1 பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு நடைபெறும் கே.கே.நகர் பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பாரதியார் சாலையில் உள்ள ஆர்.சி.ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் மேலப்புதூர் புனித பிலோமினாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய தேர்வு மையங்களை மாவட்ட கலெக்டர் கு.இராசாமணி, நேற்று (02.07.2017) பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

 கலெக்டர் ஆய்வு

 ஆய்விற்குப்பின்னர் மாவட்ட கலெக்டர் தெரிவித்ததாவது: திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் மொத்தம் 10292 நபர்கள் தேர்வு எழுத அழைக்கப்பட்டிருந்தனர். இவர்களில் 18 தேர்வர்கள் பார்வையற்றோர்கள், 147 தேர்வர்கள் மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் தேர்வுக்கு அழைக்கப்பட்டிருந்தனர். இவர்களில் 9430 தேர்வர்கள் தேர்வு எழுதினர். 862 தேர்வர்கள் தேர்வு எழுத வரவில்லை. இந்த தேர்வு மாவட்டத்தில் மொத்தம் 28 தேர்வு மையங்களில் நடைபெற்றது.

 தேர்வு மையங்களை கண்காணிக்க முதன்மைக் கண்காணிப்பாளர், கூடுதல் முதன்மைக் கண்காணிப்பாளர், துறை அலுவலர்கள், கூடுதல் துறை அலுவலர்கள் என 112 பேரும், அறைக்கண்காணிப்பாளர்கள் 592 பேரும் மற்றும் இதர பணியாளர்கள் 280 பேரும் பணியில் ஈடுபட்டனர். தேர்வர்கள் அலைபேசி மற்றும் இதர எலக்ட்ரானிக் பொருட்களை தேர்வு மையங்களுக்குள் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படவில்லை. தேர்வர்கள் தேர்வு மையங்களுக்கு செல்ல சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது. இவ்வாறு மாவட்ட கலெக்டர் தெரிவித்தார்.

 

 

 

 

.

 

 

 

 

 

 

 

 

 

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து