தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெற்ற முதுநிலை ஆசிரியர் நியமனத்திற்கான போட்டி எழுத்து தேர்வு : கலெக்டர் ஆ.அண்ணாதுரை நேரில் ஆய்வு

ஞாயிற்றுக்கிழமை, 2 ஜூலை 2017      தஞ்சாவூர்

தஞ்சாவூர் ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் நடைபெற்ற முதுநிலை ஆசிரியர் நியமனத்திற்கான பெண்கள் இருதய மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் எழுத்து போட்டி தேர்வினை மாவட்ட கலெக்டர் ஆ.அண்;ணாதுரை, நேரில் (02.07.2017) நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். \

போட்டி தேர்வு

இன்று நடைபெறும் போட்டி தேர்வில் தஞ்சாவூர் கல்வி மாவட்டத்தில் 17 தேர்வு மையங்களும், பட்டுக்கோட்டை கல்வி மாவட்டத்தில் 8 தேர்வு மையங்களும் என மொத்தம் தஞ்சாவூர் மாவட்டத்தில் 25 மையங்களில் 8769 நபர்கள் எழுத்துத் தேர்வு எழுதவுள்ளனர். தேர்வு எந்தவிதமான இடையூறுகள் இல்லாமல் நடைபெற தேவையான அனைத்து முன்னேற்பாடுகளையும் செய்யப்பட்டுள்ளது. தேர்வு நடைபெறும் மையங்கள் முழுமையாக ஆய்வு செய்யப்பட்டு, போதுமான மின்சார வசதி, குடிநீர் வசதி, கழிவறை வசதிகள் செய்யப்பட்டுள்ளது. தேர்வு நடைபெறும் மையங்களுக்கு தடையில்லா மின்சார வசதியும், தேர்வு மைய வழித்தடங்களில் தேர்வர்கள் சிரமமின்றி செல்வதற்கு வசதியாக கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இத்தேர்வு பணிக்காக தேர்வு மையங்களில் முதன்மைக் கண்காணிப்பாளர்கள், கூதல் முதன்மைக் கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள், கூடுதல் துறை அலுவலர்கள், அறைக் கண்காணிப்பாளர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் 858 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இம்மாவட்டத்தில் 136 மாற்றுத்திறனாளி தேர்வகளும், 8 கண்பார்வையற்ற தேர்வர்களும் தேர்வு எழுதுகின்றனர். இத்தேர்வர்கள் தேர்வு எழுத வசதியாக தரை தளத்தில் தேர்வு அறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.கண் பார்வையற்ற தேர்வர்களுக்கு கூடுதலாக 1 மணி நேரம் ஒதுக்கியும், சொல்வதை எழுதுவதற்கு ஆசிரியர்கள் நியமனம் செய்து ஆணை வழங்கப்பட்டள்ளது. வருவாய் மாவட்ட அளவில் தஞ்சாவூர் வினாத்தாள் கட்டுகாப்பாக மையத்தில் 24 மணி நேரமும் ஆயுதம் தாங்கிய காவலர்களால் வினாத்தாள்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு 02.07.2017 அன்று காலை 25 தேர்வு மையங்களுக்கும் 8 வழித்தட அலுவலர்கள் கொண்டு தனி வாகனங்கள் மூலம் ஆயுதம் தாங்கிய காவலர்கள் பாதுகாப்புடன் நேரடியாக மையங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தேர்வர்கள் தேர்வு மைய நுழைவாயிலில் காலை 8.30 மணி முதல் 9.30 மணி வரை காவலர்கள்,உடற்கல்வி இயக்குநர்கள்,உடற்கல்வி ஆசிரியர்கள் அலுவலர்கள் கொண்டு சோதனை செய்து தேர்வறைக்குள் நுழைவுச்சீட்டு (ர்யடட வுiஉமநவ) மற்றும் நீலம் அல்லது கருப்பு பந்துமுனைப் பேனா மட்டுமே எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.

இம்மாவட்டத்தில் தேர்வு பணிகள் சிறப்பான முறையில் நடைபெறுவதை கண்காணிப்பதற்கு கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டும், தேர்வு பணிகள் சிறப்பாக நடைபெறுவது குறித்து தேர்வு பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு உரிய அறிவுறுரைகள் வழங்கப்பட்டு தேர்வு பணிகள் கண்காணிப்பட்டு வருகிறது. இத்தேர்வில் 8769 தேர்வர்களில் 7873 தேர்வர்கள் எழுத்து போட்டி தேர்வினை எழுதியுள்ளனர். 896 (யுடிளநவெ) தேர்வர்கள் போட்டித் தேர்வு எழுத வரவிலலை. 2017ம் ஆண்டில் முதுகலை ஆசிரியர் நியமனத்திற்கான தேர்வு எழுதும் தேர்வர்கள் அனைவரும் அதிக மதிப்பெண்களை பெற வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு மாவட்ட கலெக்டர் ஆ.அண்ணாதுரை, தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ் (தஞ்சாவூர்), மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சுபாஷினி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து